இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் காரணம்?

பிரான்ஸ் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பிரச்சினையில் உலகம் இப்போது இரண்டாக பிரிந்துள்ளன. இந்நிலையில் இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2020, 07:15 PM IST
  • பிரான்ஸ் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளது.
  • இந்த பிரச்சினையில் உலகம் இப்போது இரண்டாக பிரிந்துள்ளன.
  • இந்நிலையில் இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.
இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் காரணம்? title=

பிரான்சில், முகம்மது நபியின் கார்டூன் வரைபடத்தை வகுப்பில் காண்பித்து கருத்து சுதந்திர பாடம் எடுத்து ஆசிரியர் பட்டப்பகலில் , நடு வீதியில் தலை வெட்டி கொல்லப்பட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரான்ஸில் (France) தேவாலயத்திற்கு அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர், 'அல்லாஹ் ஹு அக்பர்' என்று கோஷமிட்டபடியே, பெண்ணின் கழுத்தை வெட்டிய சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு (Emmanuel Macron)  தமது நாட்டில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிரான எல்லை தாண்டிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.

நாட்டில் பிரான்சிற்கு எதிராக பேரணிகளை பல தீவிர அமைப்புகள் வழிநடத்துகின்றன. சில இடங்களில் நடக்கும் பேரணிகளில் காங்கிரஸின் (Congress) பங்கும் உண்டு. 

இந்த விஷயத்தில் உலகமும் இரண்டாக பிரிந்துள்ளது. ஒரு புறம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இன்னொரு புறம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் உள்ளன.

ALSO READ | Islamophobia: ஒரே பதிலில் பாகிஸ்தானின் வாயை அடைத்த பிரான்ஸ் அதிபர்..!!!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில் இந்தியா பிரான்சுக்கு ஆதரவாக நிற்கிறது, ஆனால் இந்தியாவில் சில தீவிர சக்திகள் பிரான்சுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது ட்வீட்டில், 'பிரான்சில் நைஸ் நகரில் தேவாலயத்திற்குள் நடந்த மிருகத்தனமான தாக்குதல் உட்பட, அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பிரான்சுக்கு ஆதரவாக நிற்கும்’ என கூறியுள்ளார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 'எனது பொறுப்பு பிரான்ஸ் மக்களைப் பாதுகாப்பதாகும். எந்தவொரு சர்ச்சைகள் ஏற்பட்டாலும்,  முடிவெடுப்பதில் சிரமம் ஏற்பட்டாலும் எனது குடிமக்களைப் பாதுகாப்பேன். நான் அதை முழுமையாக நம்புகிறேன்.

மலேசிய (Malaysia) முன்னாள் பிரதமரும், அடிப்படைவாத முஸ்லீம் தலைவருமான மகாதீர் முகமது பயங்கரவாதத்தை தூண்டும் வகையில், பிரான்சில் நடந்த பயங்கரவாத கொலைகளை நியாப்படுத்தி  ட்வீட் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் இம்ரான் கான் மற்றும் துருக்கி அதிபர் எர்டோன் ஆகியோர் மகாதீருக்கு கருத்து சொல்வதற்கு முன்பே  விஷத்தைத் தூண்டியுள்ளனர்.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தனது ட்வீட்டில், ' பிரான்ஸ் தனது வரலாற்றில் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது, அவர்களில் பலர் முஸ்லிம்கள். வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்காக கோபப்படுவதற்கும், லட்சக்கணக்கான பிரெஞ்சு மக்களைக் கொல்லவும் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு” என ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ | பிரான்சில் வகுப்பில் நபிகள் நாயகத்தின் கார்டூனை காண்பித்த ஆசிரியர் தலை வெட்டி கொலை ..!!!

உண்மை நிலை என்னவென்றால், இன்று பிரான்ஸ் அதிபரின் அறிக்கையை எதிர்க்கும் உலக மக்கள், உண்மையில், இஸ்லாமியப் போபியாவை ஊக்குவித்து வருகின்றனர். இது போன்ற மக்களால் தான் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது.

இஸ்லாம் மதவெறியைக் கற்பிக்கவில்லை என்றால், இஸ்லாமின் பெயரில் பயங்கரவாத படுகொலைகள் நடப்பது ஏன்?
அப்பாவி மக்களைக் கொல்வதை இஸ்லாம் கற்பிக்கவில்லை என்றால், இஸ்லாம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது ஏன்?
இஸ்லாம் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றுகிறது என்றால், ஏன் மற்ற மத்தத்தினர் காபிர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்.

ALSO READ |  | பிரான்சில், அல்லாஹு அக்பர் என பெண்ணின் கழுத்தை வெட்டிய பயங்கர சம்பவம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News