பைடூஜ் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை முதல் டெல்லி பெண்களுக்கு இலவச பேருந்து சேவை திட்டம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (DTC) பேருந்துகள் மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) முதல் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும். டெல்லியில் பஸ் சேவைகள் வழியாக பயணிக்க விரும்பும் பெண்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டிய அவசியமில்லாத 'பைடூஜ்' நிகழ்வை துவக்கியுள்ளது.


திருவிழாவில் இலவச பேருந்து சேவையைத் தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்; “டெல்லியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் பஸ் மார்ஷல்கள் நாளை முதல் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்படும். இதற்காக 13,000 பஸ் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஆகஸ்ட் 29 ஆம் தேதி, டெல்லியில் மாநில சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, தேசிய தலைநகரில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. போக்குவரத்துத் துறைக்கு 479 கோடி ரூபாய் கூடுதல் மானியம் வழங்கவும் டெல்லி சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு 140 கோடி மானியமும், டெல்லி மெட்ரோவில் இலவச பயணத்திற்கு 150 கோடியும் மானியமாக சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.


"வாழ்த்துக்கள்! 29.10.19 முதல் DTC மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடத்துனர்களுடன் ஒற்றை ஜர்னி பாஸ் கிடைக்கும். டெல்லியில் பெண்களின் பாதுகாப்புக்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்ட புரட்சிகர நடவடிக்கை, ”என்று டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் கூறியிருந்தார்.


பைடூஜின் புனித நிகழ்வில் அக்டோபர் 29 முதல் டெல்லியில் பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம் என்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தின நிகழ்வில் அறிவித்திருந்தார். ஜூன் மாதத்தில், டெல்லியில் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இருப்பினும், மெட்ரோவில் இலவச பயணத்திற்கான ஒப்புதல் தாமதமாகியுள்ள நிலையில், தேசிய தலைநகரில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.