புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு, ஒரே ரேஷன் (One Nation, One Ration Card) கொள்கையை ஜூலை 31-க்குள் அமைல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் வழங்க அறிவுறுத்தல்கள்
கோவிட் -19 (COVID-19) பெருந்தொற்று பரவல் தொடரும் வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்க உலர் ரேஷன் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. நீதிபதி அசோக் பூஷண் மற்றும் நீதிபதி எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மூன்று ஆர்வலர்களின் வேண்டுகோளின் பேரில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 


மனுவில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது


கொரோனாவில் இரண்டாவது அலையின் (Corona Second Wave) போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு, பணப் பரிமாற்றம் மற்றும் பிற நலனளிக்கும் நடவடிக்கைகளை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டது.


ALSO READ: CBI: ISRO உளவு வழக்கில் நம்பி நாராயணனின் வாக்குமூலம் என்ன?


மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள்


அமைப்புசாரா துறையில் தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தேசிய தகவல் மையம் (NIC) உதவியுடன் ஜூலை 31 க்குள் ஒரு போர்ட்டலை உருவாக்குமாறு பெஞ்ச் கேட்டுக் கொண்டது. இதனால் நலத்திட்டங்களின் நன்மைகள் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். தொற்றுநோய் தொடரும் வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சமூக சமையலறைகளை இயக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் (Supreme Court) அறிவுறுத்தியுள்ளது. 


இலவசமாக விநியோகிக்க உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும்


தொற்று நிலைமை நீடிக்கும் வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியங்களை விநியோகிக்க, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உணவு தானியங்களை தொடர்ந்து ஒதுக்குமாறு உச்சநீதிமன்ற பெஞ்ச் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் நல செயற்பாட்டாளர்களான அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர் மற்றும் ஜகதீப் சோக்கர் ஆகியோர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பொதுநல நடவடிக்கைகளை அமல்படுத்தக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.


ALSO READ: SC: புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை நிறுத்தக் கோரிய PIL தள்ளுபடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR