ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் வசித்து வந்த பிரான்ஸ் பெண்மணி மாயமாகியுள்ளதாக ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் Gaelle Chouteau. இவரை கடந்த ஜூன் 1 முதல் காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 31-ஆம் நாள் தான தங்கியிருந்து ஓட்டலில் தான் இரண்டு நாள் பயணமாக ஜெய்பூர் செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை காணவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டு தூதர் உதவி கேட்டதன் பின்னரே இந்த விவகாரம் காவல்துறை காதிற்கு எட்டியுள்ளது. பின்னர் மாயமான Gaelle Chouteau-வினை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Gaelle Chouteau விடுதியில் கூறிய தகவலின் பேரில் அவரது நண்பர்களிடன் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த மே 31 ஆம் நாளுக்கு பின்னர் அவரை காணவில்லை என தெரிவித்துள்ளனர். அந்நாள் முதல் Gaelle Chouteau-வின் சமூக வலைதளங்களும் செயல்பாடின்றி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அதேப்போல் இவர் தனது மொபைல், ATM போன்ற எந்த விஷயத்தினையும் உபயோகிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றது.



இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடன் உதவி கோரி காவல்துறையினர் Gaelle Chouteau-ன் வழக்கின் தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.