கொழும்பு: இலங்கையின் கிழக்கு கடலில், கடந்த வாரம் குவைத்திலிருந்து கச்சா எண்ணெயை எடுத்துச் செல்லும்போது ஒரு பெரிய எண்ணெய் டேங்கரில் பற்றிக் கொண்ட தீ முன்னதாக கட்டுபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது தீ பற்றீக் கொண்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீயை அணைக்க போராடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்டி நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயினால் கப்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். சுமார் 22 பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது, ஆனால் கடுமையான வெப்பம் காரணமாக, தற்போது தீ மீண்டும் பற்றிக் கொண்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


தற்போது வரை எண்ணெய் கிடங்கிற்கு தீ பரவுவதற்கோ அல்லது கப்பலில் இருந்து கடலில் எண்ணெய் கசியும் ஆபத்தோ இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, விமானங்கள் ஆகியவை வானிலை காரணமாக மீண்டும் பற்றிக் கொண்ட தீயை அடக்குவதற்காக தங்கள் பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகளைத் தொடர்கின்றன என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.


ALSO READ | சீனாவின் முகத்திரை கிழிந்தது...ஈட்டிகளை ஏந்திய சீன படையினர் புகைப்படம் வெளியீடு..!!


கடந்த வியாழக்கிழமை தீப்பிடித்த இந்த சரக்கு கப்பல் குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து, இந்தியாவில் ஒடிஷா துறைமுகத்திற்கு கச்சா எண்ணெயை கொண்டு சென்று கொண்டிருந்தது. அங்கு இந்தியன் ஆயில் கார்ப் ஒரு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.


இலங்கை சரக்கு கப்பலில் 2.7 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயும், சுமார் 1,700 மெட்ரிக் டன் டீசலும் இருந்ததாக கூறப்படுகிறது.


ALSO READ | சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கும் தைவான்..!!!