மழை பெறுவதற்காக பா.ஜ.க அமைச்சர் இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த வேடிக்கையான சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் லலிதா யாதவ். இவர் சத்தர்பூர் பகுதியில் உள்ள கோயிலில் 2 தவளைகளுக்கு திருமண செய்து வைத்துள்ளார். மழை வருவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 


இந்த அதிசய நிகழ்வை பார்க்க 100-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். தவளைகள் திருமணத்திற்கு பிறகு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அக்கோயிலின் பூசாரி ஆச்சார்யா பிரிஞ்நந்தன் கூறும்போது, "இது போன்ற நிகழ்வுகள் பழமையான சடங்கு என்றும் இதனால் இந்த ஆண்டு அதிக மழை பெய்யும” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுப்பற்றி பேசிய அமைச்சர் லலிதா, “இயற்க்கையை சமன் படுத்த இது போன்ற சடங்குகள் செய்ய வேண்டும்” என கூறியிருக்கிறார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 



இதே போல, உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மழை பொழிய வேண்டும் என்பதற்காக இரண்டு பிளாஸ்டிக் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த வேடிக்கையான சம்பவம் நேற்று நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது!