புது டெல்லி: ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய இருநாட்கள் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. G20 மாநாட்டில், 25 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதால், உலகத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு, டெல்லி மாநில அரசு இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. அந்த வரிசையில், அனைத்து ஆன்லைன் டெலிவரி மற்றும் வணிகச் சேவைகளையும் நிறுத்தி வைப்பது உட்பட புது டெல்லியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் அனைத்து கிளவுட் கிச்சன்கள், வணிக நிறுவனங்கள், சந்தைகள், உணவு விநியோகம் மற்றும் வணிக விநியோக சேவைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அமேசான், பிளிப்கார்ட் டெலிவரி சேவைக்கு தடை:
ஜி20 மாநாடு நடைபெறவுள்ளதால் “கிளவுட் கிச்சன் மற்றும் உணவு விநியோக சேவைகளை நாங்கள் டெல்லியில் அனுமதிக்க முடியாது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணைய விநியோக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு மண்டலத்தில் செயல்பட அனுமதிக்கப்படாது. ஆனால் மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது” என்று சிறப்பு காவல் ஆணையர் (போக்குவரத்து) எஸ்.எஸ்.யாதவ் செப்டம்பர் 4 அன்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


மேலும் படிக்க - G20: ஒரு நாளுக்கு லட்சம் ரூபாய் கார் வாடகையா? டெல்லியில் உயரும் வாடகை


சேவை வாகனங்கள் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படும்:
இருப்பினும், ஆய்வக அறிக்கைகள் மற்றும் மருத்துவ மாதிரி சேகரிப்புகள் உட்பட அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கு நகரம் முழுவதும் அனுமதிக்கப்படும். புது தில்லி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் வீட்டு பராமரிப்பு, உணவு வழங்குதல், குப்பைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள குறிப்பிடத்தக்க சில சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படும் என்றார்.


அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி:
அஞ்சல் மற்றும் மருத்துவ சேவைகள், போன்ற அத்தியாவசிய சேவைகள் டெல்லி முழுவதும் அனுமதிக்கப்படும் என்றும் சிறப்பு காவல் ஆணையர் யாதவ் கூறினார்.


மேலும் படிக்க - இந்தியாவை பாரத் என பெயர் மாற்ற முடியுமா... அரசியலமைப்பு சொல்வது என்ன?


சுப்ரீம் கோர்ட் மெட்ரோ ஸ்டேஷன் மூடப்படும்:
அதேபோல சுப்ரீம் கோர்ட் மெட்ரோ ஸ்டேஷன் தவிர, மெட்ரோ சேவைகள் பாதிக்கப்படாது என்றும் மூத்த அதிகாரி கூறினார். விஐபி நடமாட்டம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக மெட்ரோ ஸ்டேஷன்களில் 10-15 நிமிடங்களுக்கு வாயில்கள் மூடப்படலாம். ஆனால் பிரகதி மைதானம் (சுப்ரீம் கோர்ட்) ஸ்டேஷன் தவிர மற்ற ரயில் நிலையங்களில் மெட்ரோ சேவை பாதிக்கப்படாது என்றார்.


அலுவலகங்கள் செப்டம்பர் 8 முதல் 10 வரை மூடப்படும்:
இதற்கிடையில், ஜி 20 மாநாட்டைக் கருத்தில் கொண்டு தேசிய தலைநகரில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் செப்டம்பர் 8 முதல் 10 வரை மூடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சில பகுதிகளை தவிர பேருந்துகள் இயக்க அனுமதி:
டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகளும் தடை செய்யப்பட்ட பகுதியை தவிர மற்ற வழித்தடத்தில் செயல்படும். மக்களை அதை பயன் படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க - G-20 அழைப்பில் பாரத குடியரசுத்தலைவர்... எதிர்கட்சியினர் கண்டனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ