மக்களுக்கு அரசு அளித்த சூப்பர் செய்தி: பெட்ரோல், டீசல் விலை குறைந்தது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. மக்களுக்கு டீசல்-பெட்ரோல் விலைவாசி உயர்வின் பாதிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. கலால் வரியை அரசு குறைத்துள்ளது. நாளை முதல் டீசல் குறைந்தபட்சம் 10 ரூபாயாகவும் பெட்ரோல் குறைந்தபட்சம் 5 ரூபாயும் குறைக்கப்படுகிறது.
ராபி பயிர் பருவத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருளின் விலை குறையும். வரும் ராபி பயிர் பருவத்தில் டீசல் விலை குறைப்பு விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.
விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் ஊரடங்கின் (Lockdown) போது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை தக்க வைத்தனர் என்றும், டீசல் மீதான கலால் வரியை பெருமளவில் குறைப்பது வரும் ராபி பருவத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்றும் அரசாங்கம் நம்புகிறது.
ALSO READ: Edible Oil Price: பண்டிகை காலத்தில் பளிச் செய்தி, சமையல் எண்ணெய் விலை குறைந்தது
கடந்த சில மாதங்களாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதன் விளைவாக, சமீப வாரங்களில் பணவீக்க அழுத்தத்தின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்தன. உலகம் எரிசக்தி பற்றாக்குறை மற்றும் அனைத்து வகையான விலையுயர்வையும் கண்டது. நாட்டில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல் (Petrol), டீசல் போன்ற பொருட்கள் நமது தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்திய அரசு முயற்சித்து வருகிறது.
VAT-ஐ குறைக்க மாநிலங்களுக்கு முறையீடு
பொருளாதாரத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியை கணிசமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பால் நுகர்வு அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தையும் இது குறைக்கும், இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும்.
இன்றைய முடிவு முழு பொருளாதார சுழற்சிக்கும் அதிக வேகத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் (VAT) வரியை குறைக்க மாநில அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ: உச்சம் தொடும் காய்கறி விலை; இன்றைய விலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR