மோடி-ன் பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்தியரசு திட்டம்!!
டெல்லியில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுவரை 1800 க்கும் அதிகமான பரிசுப் பொருட்கள் பிரதமர் மோடிக்கு வந்துள்ளன. அவை டர்பன், சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் என அடங்கும். தற்போது இந்த அனைத்து பொருட்களும் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுப் பொருட்களை இந்த மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை நதியை பாதுகாத்து புத்துயிர் பெற வைக்கும் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பரிசுப் பொருட்களை நேரடியாக 2 நாட்களும், இணையதளம் மூலம் 3 நாட்களும் ஏலம் எடுக்கலாம்.