சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார ஆலோசகராக, இந்திய பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ரகுராம் ராஜன் அவர்களுக்கு பின்னர் இப்பதவியை பெரும் இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் பதவியேற்றதற்கு முன்னதாக 2003-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார ஆலோசகராக பதவிவகித்தார்.


தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத்(46) இந்தியாவில் பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்தவர். 


தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஜான் ஸ்வசந்த்ரா சர்வதேச ஆய்வுகள் மற்றும் பொருளாதாரம் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். பிரபல பொருளாதார பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியராக இருக்கும் இவர் 40 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி உள்ளார்.