புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லி லோக் கல்யாண மார்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம், உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உட்பட பல பிரச்சனைகளை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவாக, நிதி நெருக்கடி காரணமாக மூடப்படும் நிலையில் உள்ள BSNL மற்றும்  MTNL ஆகியவற்றை வலுப்படுத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்காக BSNL மற்றும் MTNL பொதுத்துறை நிறுவனங்களுக்கு போதிய நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 


அதேபோல விவசாயிகளுக்கும் மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. ராகி பயிரின் ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு கோதுமையின் ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு 85 ரூபாயும், கடுகு விலை குவிண்டாலுக்கு 225 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில பயிர்வகை பொருட்களுக்கு ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 


பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பாகவும் மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. பெட்ரோல் பங்க தவிர மற்ற நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க முடியும். பெட்ரோல் பம்புகளைத் தவிர வாடிக்கையாளர்களும் பொதுகடையிலிருந்தும் பெட்ரோல் டீசலை வாங்கலாம். இதற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


டெல்லியில் 1,797 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் 40 லட்சம் குடியிருப்பாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்காக மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும்.