Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தேர்தல் ஆண்டு என்பதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election) நடக்கவுள்ளது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசாங்கம், ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய உரையில் நிதி அமைச்சர் சென்ற ஆண்டில் மோடி அரசாங்கம் (Modi Government) செய்த நற்பணிகளை கோடிட்டுக் காட்டினார். மக்களின் முழு ஆதரவுடன் வரும் தேர்தலிலும் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் குறிப்பு காட்டியுள்ளார்.


நடுத்தர வர்க்க மக்களுக்கு முக்கிய அறிவிப்பு


இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கான (Middle Class) ஒரு மிகப்பெரிய அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிட்டார். இது மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. தனது உரையில், நிர்மலா சீதாராமன், வீடுகளை வாங்குவதற்கும் கட்டுவதற்கும் மத்திய அரசு (Central Government) வீட்டு வசதி திட்டத்தை (Housing Scheme) கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள் அல்லது அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினருக்கு சொந்த வீடு வாங்கவும் கட்டவும் உதவும் திட்டத்தை அரசு தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். இது நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள்: நிதி அமைச்சர் உறுதி


உலகையே ஆட்டிப்படைத்த கோவிட் பெருந்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PM Awas Yojana Gramin) தடையின்றி தொடர்ந்தது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். 3 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட நெருங்கிவிட்டோம் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். இது குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் தேவையை பூர்த்தி செய்ய உதவும். 


மேலும் படிக்க | மத்திய அரசின் சோலார் திட்டம்... 300 இலவச மின்சாரம்... முழு விவரம் இதோ!


மேற்கூரை சூரிய ஒளிமயமாக்கல் (Roof-Top Solarization)


நிதியமைச்சர் தனது உரையில், மேற்கூரை சூரிய ஒளிமயமாக்கல் மூலம், 1 கோடி குடும்பங்கள் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும் என்றார். அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் வரலாற்று சிறப்புமிக்க நாளில் பிரதமர் மெற்கொண்ட தீர்மானத்தை ஒட்டி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். 


2047-ல் இந்தியா வளர்ந்த நாடாகும்: நிதி அமைச்சர் நம்பிக்கை


வளர்ச்சியை எளிதாக்கும் வகையில் அடுத்த கட்ட சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ளும் என்று நிதி அமைச்சர் கூறினார். அடுத்த ஐந்தாண்டுகள் இதுவரை கண்டிறாத வளர்ச்சி இருக்கும் என்று கூறிய நிதி அமைச்சர், 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை நாம் நிஜமாக்குவோம் என்று நம்பிக்கை ஊட்டினார். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, அவர் ‘அமிர்த காலின்’ (Amrit Kaal) உத்தியை கோடிட்டுக் காட்டினார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடமானது (India Middle East Europe Economic Corridor) இந்தியாவின் பிம்பத்தை உலக அளவில் மாற்றியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 


நேற்றைய பட்ஜெட் உரையில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நடுத்தர வர்க்க மக்களுக்கான வீட்டு வசதி பற்றிய நிதி அமைச்சரின் (Finance Minister) இந்த குறிப்பு மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவே வந்துள்ளது. 


மேலும் படிக்க | தொடங்கியது ரிசார்ட் அரசியல்... ஹைதராபாத்திற்கு செல்லும் ஜார்கண்ட் MLAக்கள்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ