பாலசோர் விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்பு, ரயிலுக்குள் எடுக்கப்பட்ட ஒரு பயங்கரமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ஆயிரக்கணக்கானவர்கலின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விபத்து நடைபெறுவதற்கு முந்தைய நொடியும், விபத்து நிகழ்ந்த கணமும் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் வீடியோ அது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திகிலூட்டும் அந்த வீடியோ, பாலசோர் ரயில் விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்த பயணியால் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும்போது, ​​​​விபத்து நேர்ந்தபோது, ஏற்பட்ட திடீர் அதிர்வு காரணமாக வீடியோவை எடுத்த நபரின் சகையிலிருந்து தொலைபேசி நழுவியது தெரிகிறது.



பாலசோர் விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்பு, ரயிலுக்குள் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ, சோகத்தை ஏற்படுத்துகிறது.


 


மேலும் படிக்க | 20 நிமிடங்களில் மூன்று ரயில்கள் விபத்து! பயணிகளின் நிலை என்ன?


திகிலூட்டும் வீடியோ


பாலாசோரில் உள்ள பஹானாகாவில் பயங்கர ரயில் விபத்து ஏற்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பயணிகளில் ஒருவரால் படமாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில், பயணிகளில் பலர்  தங்கள் பெர்த்தில் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்..



பயணிகளின் நிலை


சிலர் ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டிருந்தார்கள். துப்புரவுப் பணியாளர் ஒருவர் ஏசி பெட்டியின் தரையைத் துடைத்துக் கொண்டிருக்கிறார். மூன்று ரயில்கள் விபத்துக்கு காரணமான முதல் ரயில் விபத்து நடைபெற்ற கோரமண்டல் எக்ஸ்ப்பிரஸ் ரயிலுக்குள் எடுக்கப்பட்ட வீடியோ இது என்று கூறப்படுகிறது.


இந்த வீடியோவைப் பார்க்கும்போது, இயல்பாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒருவர், ​​​​திடீரென ஏற்பட்ட அதிர்வினால், நிலை குலைந்து போவதையும், அதன் காரணமாக, அவரது கையிலிருந்து தொலைபேசி நழுவியதையும் உணர வைக்கிறது.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், பிபிஎஃப், எம்எஃப்: எதில் கடன் பெறுவது உங்களுக்கு ஏற்றது?


இது பாலசோர் ரயில் விபத்துக்கு சில வினாடிகளுக்கு முந்தைய காட்சியா?


இந்த வீடியோவைப் பார்த்ததும், வீடியோ எடுத்தவர் கீழே விழுந்ததும், ரயிலில் கூச்சல் ஏற்பட்டதாக தோன்றுகிறது. ரயிலில் எல்லாம் இருட்டாக இருந்தது. வீடியோ திடீரென முடிவதற்குள் கோச்சில் இருந்தவர்கள் உயிருக்குக் கூச்சலிடும் சத்தம் கேட்கிறது.


வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், பயணிகளின் அலறல் மனதைப் பிசைகிறது. 


ஜூன் 2ஆம் தேதி மாலை ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மற்றும் யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மீது நேருக்கு நேர் மோதியதில் மொத்தம் 288 பயணிகள் உயிரிழந்தனர்.


சிபிஐ விசாரணை


இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வைரலான வீடியோவை பார்த்ததும் மக்கள் மனம் கலங்கியது. இருப்பினும், இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை என்ன, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, அல்லது ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை


தற்போது, ​​முதற்கட்ட விசாரணையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்து, பஹாநகர் பஜார் நிலையத்திற்குப் பிறகு, மெயின் லைனுக்குப் பதிலாக, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது தெரியவந்துள்ளது. ரயில் விபத்து தொடர்பான விசாரணையை ஜிஆர்பியிடம் இருந்து சிபிஐ எடுத்துக் கொண்டு, தற்போது விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஜூன் 10 முதல் ரயில்களில் பெரும் மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ