Karnataka-வில் COVID தொற்று அதிகரித்ததால் அனைத்து வித பள்ளி நடவடிக்கைகளுக்கும் 3 week holiday
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, அக்டோபர் 12 முதல் 30 வரை மூன்று வாரங்களுக்கு பள்ளி நடவடிக்கைகளுக்கு இடைக்கால விடுமுறை அறிவிக்கும் உத்தரவை பிறப்பிக்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவு.
பெங்களூரு: ஆசிரியர்களிடையே COVID-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களால் கர்நாடகா (Karnataka) அக்டோபர் 12 முதல் 30 வரை அனைத்து வகையான பள்ளி நடவடிக்கைகளுக்கும் மூன்று வார இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவை கர்நாடக முதல்வர் பி எஸ் எடியுரப்பா (BS Yediyurappa) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11, 2020) வெளியிட்டார்.
"பல ஆசிரியர்கள் COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளானதைப் பற்றி நான் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, அக்டோபர் 12 முதல் 30 வரை மூன்று வாரங்களுக்கு இடைக்கால விடுமுறை அறிவிக்கும் உத்தரவை பிறப்பிக்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். " என எடியூரப்பா ஒரு அறிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
ALSO READ: Coronavirus: கடந்த 24 மணி நேரத்தில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவு!
.இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் குறிப்பிட்டார்.
34 மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் COVID-19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, சனிக்கிழமை வித்யாகமா திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த மாநில அரசு முடிவு செய்திருந்தது.
வித்யகமா திட்டத்தின் கீழ், ஆசிரியர்கள் அரசு பள்ளி மாணவர்களின் இருப்பிடங்களை அடைந்து அவர்களுக்கு தொடர்ந்து பாடங்களை கற்பித்து வந்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான வித்யகமா திட்டம் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று முன்னர் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
அக்டோபர் 3 முதல் 26 வரை திட்டமிடப்பட்ட இடைக்கால விடுமுறைகளை இந்த மாத தொடக்கத்தில் அரசாங்கம் ரத்து செய்தது.
இதற்கிடையில், JD(S) தலைவரும் முன்னாள் முதல்வருமான எச். டி. கும்ரஸ்வாமி (H D Kumaraswamy) தொடர்ச்சியான ட்வீட்களின் மூலம், இடைக்கால விடுமுறைகளை ரத்து செய்வதற்கான மாநில அரசின் முடிவை சாடி, "ஆசிரியர்கள் சர்வாதிகாரத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
ALSO READ: Unlock 5.0: இந்த இரண்டு மாநிலங்களில் பள்ளிகளை திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR