தீபாவளி போனஸ்: மத்திய ஊழியர்களுக்கு பரிசு, அரசாங்கம் `Bonus` அறிவித்தது
மார்ச் 31, 2021 வரை பணியில் இருந்த மற்றும் 2020-21 நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி இருந்திருந்தால் அவர்கள் தற்காலிக போனஸுக்கு தகுதி பெறுவார்கள்.
புதுடெல்லி: 2020-21 நிதியாண்டுக்கான மத்திய ஊழியர்களுக்கு தற்காலிக பணியாளர்கள் அல்லாத ஊழியர்களுக்கு தற்காலிக போனஸை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதகா ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான பண்டிகை கால போனஸ் தொகை 30 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தி அல்லாத இணைக்கப்பட்ட தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் ஊழியர்களும் போனஸுக்கு தகுதியுடையவர்கள் என்று நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
அந்த அறிக்கையில், மார்ச் 31, 2021 வரை பணியில் இருந்த மற்றும் 2020-21 நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி இருந்திருந்தால் அவர்கள் தற்காலிக போனஸுக்கு தகுதி பெறுவார்கள்.
ALSO READ | ரயில்வே ஊழியர்களின் போனஸ்: முக்கிய கூறுகள் -முழு விவரம்
இந்த போனஸ் தொகையானது உற்பத்தி-அல்லாத இணைக்கப்பட்ட போனஸ் (Ad-hoc போனஸ்) திட்டத்தின் கீழ் வராத குழு-C மற்றும் குழு-B யில் உள்ள அனைத்து கெஜெட்டட் அல்லாத ஊழியர்களுக்கும் வழங்கப்படும். மேலும் இந்த தற்காலிக போனஸ் பெறுவதற்கான கணக்கீட்டு உச்சவரம்பு மாதாந்திர ஊதியம் ரூ.7000 ஆக இருக்கும்.
தற்காலிக போனஸின் குவாண்டம் சராசரி ஊதியங்கள்/அதிகபட்ச கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் என செலவினத் துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 31, 2021-க்கு முன் ராஜினாமா செய்த, ஓய்வு பெற்ற அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அல்லது அதற்கு முன் மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே தற்காலிக போனஸ் வழங்கப்படும். ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் கூட, வருடத்தில் குறைந்தது ஆறு மாதங்கள் வழக்கமாக பணியாற்றி ஊழியர்களாக இருக்க வேண்டும்.
ALSO READ | இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: சூப்பர் போனசுடன் டி.ஏ உயர்வும் கிடைக்கும்
ALSO READ | ரயில்வே ஊழியர்களுக்கு நற்செய்தி: பம்பர் போனசுக்கு ஒப்புதல் அளித்தது அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR