ரயில்வே ஊழியர்களுக்கு நற்செய்தி: பம்பர் போனசுக்கு ஒப்புதல் அளித்தது அரசு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 2020-21 நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2021, 06:25 PM IST
ரயில்வே ஊழியர்களுக்கு நற்செய்தி: பம்பர் போனசுக்கு ஒப்புதல் அளித்தது அரசு   title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு (non-gazetted Railway employees ) 2020-21 நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸுக்கு (Productivity Linked Bonus - PLB),  ஒப்புதல் அளித்துள்ளது. (RPF/RPSF பணியாளர்கள் இதில் சேர்க்கப்படவில்லை).

ரயில்வே ஊழியர்களுக்கு (Railway Employees) 78 நாட்கள் பிஎல்பி செலுத்துவதற்கு மொத்தமாக ஆகும் செலவு ரூ .1984.73 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் பணிபுரியும் தகுதியுள்ள அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு பிஎல்பி செலுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட ஊதிய கணக்கீட்டு உச்சவரம்பு மாதத்திற்கு ரூ .7000 ஆகும். தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக 78 நாட்களுக்கு ரூ .17,951 செலுத்தப்படலாம், 

அரசின் (Central Government) இந்த முடிவால் சுமார் 11.56 லட்சம் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது. தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி / தசரா/ துர்கா பூஜை விடுமுறைக்கு முன் பிஎல்பி செலுத்தப்படுகிறது. அமைச்சரவையின் முடிவு இந்த ஆண்டும் விடுமுறைகளுக்கு முன்னதாக செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: சூப்பர் போனசுடன் டி.ஏ உயர்வும் கிடைக்கும்

2010-11 முதல் 2019-20 வரையிலான நிதியாண்டுகளில் 78 நாட்கள் ஊதியத்தின் பிஎல்பி தொகை வழங்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டிலும் 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான பிஎல்பி தொகை வழங்கப்படும். இது ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு பணியாளர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வேயில் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ், நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்கள் (RPF/RPSF பணியாளர்கள் தவிர) உள்ளடக்கியது.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு கிடைக்குமா DA, DR அரியர் தொகை? அரசு கூறுவது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News