ராம் ரஹீம்... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமிய பெண் செய்த `நச்` சம்பவம்!
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அன்று இஸ்லாமிய பெண் ஒருவர், இந்து - இஸ்லாமிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தனது குழந்தைக்கு `ராம் ரஹீம்` என பெயர் சூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindu Muslim Unity: அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நேற்றைய தினத்தில், ஃபிரோசாபாத்தில் ஒரு இஸ்லாமிய பெண் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேலும், அந்த குழந்தைக்கு ராம் ரஹீம் என்றும் பெயரிட்டார்.
காரணம் என்ன?
இதுகுறித்து ஃபிரோசபாத் மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவர் நவீன் ஜெயின் கூறியதாவது, "ஃபர்சானா என்ற அந்த பெண்ணுக்கு திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமாக உள்ளனர்.
குழந்தையின் பாட்டி ஹுஸ்னா பானு அந்த குழந்தைக்கு ராம் ரஹீம் என்று பெயரிட்டுள்ளார்" என்றார். மேலும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் குழந்தைக்கு ராம் ரஹீம் என்று பெயர் வைத்ததாக பானு கூறியிருக்கிறார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம்
உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பிரான் பிரதிஷ்டை பிரதமர் மோடியின் முன்னிலையில் செய்யப்பட்டது. அப்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் இருந்தனர். மேலும், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், தனுஷ், சிரஞ்சீவி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கோவில் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி மற்றும் உயரம் 161 அடி; மற்றும் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் உள்ளன. கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள் மற்றும் மிகவும் நுட்பமான சிற்பங்களை காட்சிப்படுத்துகின்றன. கீழ் தளத்தில் உள்ள பிரதான கருவறையில், குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைதான் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்னும் இரண்டு தளங்கள் அந்த கோவிலில் கட்டப்பட உள்ளன.
தாய்மார்களின் ஆசை
ஒரே கருங்கல்லால் ஆன இந்த சிலை 51 இன்ச் உயரம், 1.5 எடையும் கொண்டது. முதல் தளத்தில் ராஜ கோலத்தில் இருக்கும் ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் ஆகியோருடன் இருக்கும் சிலை விரைவில் வைக்கப்பட உள்ளது. மேலும், இன்று முதல் ராமர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கடியுடன் ராமர் கோவில் தற்போது காணப்படுகிறது.
தொடர்ந்து நேற்று குழந்தை ராமர் பிரான் பிரதிஷ்டையின் போது, உத்தர பிரதேசத்தில் பல கர்ப்பணிகள் தங்களின் அறுவை சிகிச்சையை அந்த நல்ல நேரத்தில் நடத்தும்படி கேட்டுக்கொண்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும், அதில் பலரும் தங்கள் குழந்தைக்கு ராம், ராகவ், ரகு என பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ