இன்று தலைநகரம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 33_வது கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் வீடுகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் அதுக்குறித்து இறுதி முடிவு வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து மாநிலங்களில் தொழில்முனைவோரும், வர்த்தகர்களும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் அவகாசம் 20 ஆம் தேதியில் இருந்து வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இதன்மூலம் இரண்டு நாள் அவகாசம் கிடைத்துள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வரை ஜிஎஸ்டி ஆர் 3பி படிவங்களை சமர்ப்பிக்கலாம்.