குஜராத் தேர்தல் 2017: 70 கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!!
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும்.
70 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் குஜராத்தின் பாஜக தலைவர் ராஜ் ஜிதூபாய், முதல் அமைச்சராக போட்டியிடும் விஜய் ரூபனி மற்றும் துணை முதல் அமைச்சராக போட்டியிடும் நிதின் பாய்பட்டேல் பெயர்களும் இடம் பெற்று உள்ளது.
இந்த பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பிஜேபி மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆலோசனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.