சண்டிகர்: அரியானா (Haryana) இளைஞர்களுக்கு மிகப்பெரிய செய்தி வெளியாகி உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இந்த முக்கியமான மசோதாவுக்கு அரியானா கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா (Satyadev Narayan Arya) செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார். இந்த தகவலை மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா (Dushyant Chautala) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரியானா மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா, இன்று மாநில இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான நாள் என்று கூறினார். இப்போது மாநில இளைஞர்களுக்கு தனியார் வேலைகளில் 75 சதவீத வேலைவாய்ப்பு கிடைக்கும்.


ALSO READ | வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்



இந்த மசோதா கடந்த ஆண்டு நவம்பரில் அரியானா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது, மேலும் இது 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ஆளும் கூட்டணி பங்குதாரர் துஷ்யந்த் சவுதலா தலைமையிலான ஜன்னாயக் ஜனதா கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.


அரியானா மாநில தலைநகர் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை உறுதிப்படுத்தியதாக பி.டி.ஐ (PTI) தெரிவித்துள்ளது. இந்த மசோதாவை விரைவில் தனது அரசாங்கம் அமல்படுத்தும் எனவும் முதல்வர் கூறினார்.


ALSO READ | 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான பிடிவாதத்தை மத்திய BJP அரசு கைவிட வேண்டும்: MKS


இந்த மசோதா உள்ளூர் வாசிகளுக்கு சில வரையறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, மாநில குடியேற்ற அந்தஸ்தைப் பொறுத்தவரை, ஒரு நபர் அரியானாவில் பிறந்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 15 வருடங்கள் மாநிலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று பி.டி.ஐ. செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR