வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Feb 28, 2021, 11:04 AM IST
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இது குறித்து பாமக கட்சியினரும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தது.

இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு (Reservation) தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு (Vanniyar) 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் (TN Assembly) கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

ALSO READ | PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி

இந்த மசோதாவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. சீர்மரபினருக்கு 7 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. அந்தவகையில் தற்போது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News