சாலை விதிகளை மீறிய போலீசார்! விபத்தில் கைக்குழந்தை பலி! ஐவர் காயம்
Gurugram Police ERV Vehicle Accident: ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது, போலீஸ் வாகனம் மோதியதில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது, பலர் காயமடைந்தனர்
நியூடெல்லி: ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது, போலீஸ் வாகனம் மோதியதில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது, பலர் காயமடைந்தனர். இந்த சோகமான விபத்து, குருகிராம்-பரிதாபாத் சாலையில் நடந்தது. காவல்துறையின் ஈஆர்வி வாகனம் தவறான பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்ததே விபத்திற்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.. ஈஆர்வி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று குருகிராம் மாவட்ட ஏசிபி, விகாஸ் கௌசிக் தெரிவித்தார்.
குருகிராமில் போலீஸ் வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ள நிலையில், கைக்குழந்தை உயிரிழந்துவிட்டது. போக்குவரத்து விதிகளை மீறி, விபத்தை ஏற்படுத்திய போலீசார் தலைமறைவாகிவிட்டனர்.
பச்சிளம் குழந்தையை பலி கொண்ட இந்த விபத்து தொடர்பாக, சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ள்து.
வட இந்தியாவில் கடும் குளிர் அதிகரித்துள்ள நிலையில், பனிமூட்டம் காரணமாக சாலையில் புலப்பாடு மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என போலீசாரே அறிவுறுத்தி வரும் நிலையில், சாலையில்ல் தவறான பக்கத்தில் இருந்து வந்த போலீசாரின் வாகனமே விபத்திற்கு காரணமாகி இருப்பது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | Nepal Plane Crash: நோபாள விமான விபத்து - 72 பேர் நிலை என்ன?
அவசரகால பதிலளிப்பு வாகனம் (ERV (emergency response vehicle)) என்பது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களைக் கொண்ட அவசரநிலைகளைக் கையாளும் வாகனம், அந்த வாகனமே விபத்துக்கு காரணமாகி உள்ளது.
ஸ்விஃப்ட் வாகனத்தில், இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் கார் டிரைவர், கைக்குழந்தை என மொத்தம் ஆறு பேர் பயணித்த நிலையில், பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில், காயமடைந்த ஐந்து பேரின் நிலைமை மோசமாக இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமைக் காலை 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் ஹரியானாவில் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் விபத்தில் சிக்கிய போலீசார் அங்கிருந்து தப்பியோடி விட்டதும் அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் படிக்க | Work From Home மூலமா வேலையா... பாத்து சூதானமா இருங்க - இனி அபராதம்தான்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ