Haryana State Election 2024: மீண்டும் `ஹாட்ரிக்` வெற்றி பெறுமா பாஜக? காங்கிரஸ் நிலை என்ன?
Haryana State Election Results 2024: ஹரியானா தேர்தல் களத்தில் பல கட்சிகள் போட்டியில் இருந்தாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கிறது. யாருக்கு வாய்ப்பு பார்ப்போம்.
Haryana Assembly Elections 2024 Latest Update: ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவு முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளா பாஜாக தான் ஆட்சியில் இருக்கிறார்கள். மீண்டும் பெரும்பான்மை பெற்று பாஜக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வார்களா? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. மறுபுறம் இந்தமுறை காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஏதுவாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் ஹரியானா மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் எனத் தெரிந்து விடும்.
ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கை
ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரையிலும் அங்கு மொத்தமாக 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கிறது. இந்தமுறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் மாநில கட்சிகள் என கடுமையான போட்டி இருந்தது.
ஹரியானா தேர்தல் முடிவுகள்: பாஜக தேர்தல் வியூகம்
பாஜகவை பொறுத்தவரையிலும் முக்கியமான தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். குறிப்பா சொல்ல வேண்டும் என்றால், மத்திய அமைச்சரா இருக்கக்கூடிய ராஜ்நாத் சிங், அனுராக் தாகூர், ஹேமமாலினி ஆகியோர் இங்கு தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஹரியானா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் தேர்தல் வியூகம்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரைக்கும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸோட தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தொடங்கி ராகுல் காந்தி என பலரும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
ஹரியானா மாநிலத்தின் தேர்தல் வரலாறு
கடந்த 10 ஆண்டுகளாக பாஜாக தான் ஆட்சியில் இருக்கிறது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் இருக்கக்கூடிய 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பாஜாக கைப்பற்றியது. காங்கிரஸ் 30 தொகுதிகள் கைப்பற்றியது.
ஹரியானா மாநிலத்தின் முக்கியமான ஒரு கட்சியா பார்க்கப்படும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 தொகுதிகளில் வெற்றி பெற்று கிங்மேக்கராக இருந்தது.
ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை தொகுதிகள் 46. ஆனால் பாஜாக வெறும் 40 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றிருந்தது. எனவே தேர்தலுக்கு பிறகு ஜேஜேபி கட்சியோடு கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறார்கள். அதன்பின் பாஜாகவை சேர்ந்த மனோகர்லால் கட்டார் முதல்வராகவும், துணை முதல்வர் பதவியை ஜேஜேபி கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய துஷ்யந்த் சவுதாலாவுக்கு வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் எந்தவித பிரச்சனையும் இல்லாம பாஜக, ஜேஜேபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அதன்பிறகு இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்தான்.
ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரையில் அங்கு மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக தான் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் இந்தமுறை கூட்டணியில் அங்கம் வகித்த ஜேஜேபி கட்சி எங்களுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்க வெட்நும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால் பாஜக தரப்பில் ஒரு தொகுதி தான் ஒதுக்க முடியும் எனத் திட்டவட்டமாக கூறியதால், ஜேஜேபி கட்சி கூட்டணியை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
ஜேஜேபி கட்சி வெளியேறியதால், பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், பாஜக ஆட்சி கவிழும் நிலைக்கு செட்ன்றது. அதன் பிறகு சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட சிலரின் ஆதரவோடு ஆட்சியை தக்கவைத்து, கடந்த 10 மாதங்களாக ஆட்சியில் இருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க, ஹரியானா மாநிலத்தில் பாஜக கட்சிக்குள் பிரச்சனை வெடிக்க, அப்போதைய முதல்வராக இருந்த மனோகர்லால் கட்டாரை நீக்கிட்டு, நயாம்சிங் ஜைனியை முதல்வராக போடராங்க. அதன் பிறகுதான் சட்டப்பேரவையில பெரும்பான்மையை நிரூபிச்சு ஆட்சியை தக்க வைத்துக்கொள்கிறார்கள்.
2024 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கள நிலவரம்
2024 மக்களவை தேர்தல் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் போட்டியிட பாஜக, வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெறுகிறார்கள். மற்ற ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. இந்த வெற்றி மூலம் ஹரியானா மாநிலத்தில் பாஜக எதிராக மக்களுக்கு அதிருப்தி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. எனவே இந்த சட்டப்பேரவைத் தேர்தல் பாஜாகவுக்கு பெரும் சிக்கலாக தான் இருக்கிறது என பல அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
2024 சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரையிலும் பாரதிய ஜனதா கட்சி தனியாகவும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து காங்கிரஸும், ஜனநாயக ஜனதா கட்சியும் ஆசாத் சமாஜ் கட்சியும் இணைந்தும், இந்திய தேசிய லோக் தளமும் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளனர். இந்த நான்கு கூட்டணிகளிலும் இடம்பெறாமல் ஆம் ஆத்மீ தனித்து இந்த தேர்தலை எதிர்கொண்டது.
ஹரியானா தேர்தல் களத்தில் பல கட்சிகள் போட்டியில் இருந்தாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ