திருப்பதி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுக்கள் இது வரை, கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பு உருவாக்கும் நந்தினி நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்தது. சுமார் 50 ஆண்டுகளாக திருப்பதி லட்டுக்களுக்கு நந்தினி
நெய் தான் பயன்படுத்தப்பட் டு வருகிறது. இந்த நிலையில், இந்த மாதம் அதாவது இன்றுடன் நந்தினி நெய்க்கு திருப்பதி தேவஸ்தானம் அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் விற்பனையைச் செய்து வருவதை போல கர்நாடகாவில் கர்நாடகா பால் கூட்டமைப்பு நந்தினி நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் கேஎம்எஃப்- கர்நாடகா பால் கூட்டமைப்பின் (KMF) நந்தினி பிராண்ட் பால் விற்பனையைச் செய்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்களின் விலையைக் காட்டிலும் அரசு நிறுவனங்களின் பால் விலை குறைவு என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதையே வாங்குகிறார்கள். இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நந்தினி பிராண்ட் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியுள்ளது. கர்நாடக கூட்டுறவு அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், நிலைமையை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கேஎம்எஃப் தலைவர் பீமா நாயக் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், கர்நாடக பால் கூட்டமைப்பு (KMF) நடத்தும் நந்தினி பால் பண்ணையின் நெய்யைப் பயன்படுத்தி இனி திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்படாது என்று கேஎம்எஃப் தலைவர் பீமா நாயக் தெரிவித்துள்ளார். நந்தினி பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நெய் டெண்டரை வேறு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.


மேலும் படிக்க | பால் விலை லிட்டருக்கு 3 ரூ உயர்வு! மக்களின் கவலைகளுக்கு காங்கிரஸ் சொல்லும் பதில் என்ன?


பல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாயக், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்ததால், நெய் விலையும் உயரும். திருப்பதி லட்டுகளை குறைந்த விலையில் தயாரிக்க நெய் வழங்கும் புதிய நிறுவனத்தை TTD கண்டுபிடித்துள்ளது. எனவே, பல ஆண்டுகளுக்குப் பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நந்தினி நெய் வழங்குவதை நிறுத்த வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டார். எனினும் புதிய நிறுவனம் குறித்த தகவல் வெளியாகவில்லை.


மேலும், நந்தினியின் நெய் உலகத் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற பிராண்ட் நெய் அதன் தரத்துடன் ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறினார். “இனிமே லட்டு முன்பு மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறேன். நந்தினி சந்தையில் சிறந்த நெய்யை வழங்குவதோடு, அனைத்து தர சோதனைகளையும் மேற்கொள்கிறார் என்றும் என்னால் உறுதியளிக்க முடியும். நந்தினியை விட குறைந்த விலையில் நெய்யை ஏதேனும் ஒரு பிராண்ட் வழங்கினால், தரத்தில் சமரசம் ஏற்படும் என்று நான் கருதுகிறேன், ”என்று KMF தலைவர் கூறினார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதி லட்டு தயாரிக்க நந்தினி நெய் சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது.


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவினால், நந்தினி பால நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனினும்,  விலை உயர்வு இருந்த போதிலும், கர்நாடகாவில் மற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நந்தினி பால் விலை குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் நந்தினி பால் விலை லிட்டருக்கு 39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் தனியார் நிறுவனங்களின் பால் விலை ரூ 48 முதல் ரூ 52 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ