பால் விலை லிட்டருக்கு 3 ரூ உயர்வு! மக்களின் கவலைகளுக்கு காங்கிரஸ் சொல்லும் பதில் என்ன?

Milk Price Hiked: பால் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 28, 2023, 03:24 PM IST
  • பால் விலை உயர்ந்தது
  • லிட்டருக்கு 3 ரூபாய் உயர்ந்தது
  • கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு
பால் விலை லிட்டருக்கு 3 ரூ உயர்வு! மக்களின் கவலைகளுக்கு காங்கிரஸ் சொல்லும் பதில் என்ன? title=

பெங்களூரு: பால் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கர்நாடகா பால் கூட்டமைப்பு (KMF) தயாரிப்புகளின் பிராண்ட் பெயர் நந்தினி. அமைச்சரவை கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிய முதலமைச்சர் சித்தராமையா,, மற்ற மாநிலங்களில் பால் விலை மிக அதிகமாக உள்ள நிலையில், கர்நாடகா குறைந்த விலையில் பால் விற்பனை செய்வதாக தெரிவித்தார்

கர்நாடகாவில் பால் விலை

'ரூ.39க்கு விற்கப்படும் பால் (டோன்ட்) இனி ஒரு லிட்டர் ரூ.42க்கு விற்கப்படும். நாட்டின் பிற இடங்களில், பால் லிட்டருக்கு ரூ.54 முதல் ரூ.56 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் இதன் விலை லிட்டருக்கு ரூ.44” என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த முடிவு குறித்து துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், 'விவசாயிகளுக்கு (பால் உற்பத்தியாளர்களுக்கு) பணம் கொடுக்க வேண்டும். இன்று நாடு முழுவதும், டோன்டு மில்க் விலை  லிட்டருக்கு ரூ.56. கர்நாடக மாநிலத்தில் மக்கள் மிகக் குறைந்த விலையில் பால் வாங்குகின்றனர்’ என்று சிவக்குமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க | நடுங்கும் குரங்குகள்.... பால் கொடுத்த நபர்: பார்த்தால் அழாமல் இருக்க முடியாது, வைரல் வீடியோ

விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகளுக்கு உதவும் வகையில் பால் விலையை 3 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக ஏப்ரல் மாதத்தில், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு குஜராத்தில் அமுல் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.

இந்த உயர்வுக்கு பிறகு அமுல் எருமை பால் விலை லிட்டருக்கு ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. அமுல் கோல்ட் பால் விலை, லிட்டருக்கு ரூ.64 ஆகவும், அமுல் சக்தி லிட்டருக்கு ரூ.58 ஆகவும் உயர்ந்துள்ளது. அமுல் பசும்பால் லிட்டருக்கு ரூ.54 ஆகவும், அமுல் நியூ ரூ.52 ஆகவும், அமுல் டி-ஸ்பெஷல் லிட்டருக்கு ரூ.60 ஆகவும் உயர்ந்துள்ளது.

பாலில் உள்ள சத்துக்கள் 
பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவு ஆகும். புரதம், கால்சியம்,வைட்டமின் பி, வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை அனைவருக்கும் பால் அவசியமானதாகும். குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்து பால் தான் அடிப்படை உணவாக உள்ளது.  

பாலின் முக்கியத்துவம்

சைவ உணவைப் பின்பற்றுகிறவர்களுக்கு பால்தான் சமச்சீர் உணவு. நாளொன்றுக்கு ஒருவருக்கு சராசரியாக 250 மி.லி. பால் அவசியம் தேவை. பெரியவர்களுக்கு 150 மி.லி போதும் என்றாலும், குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் போன்றோருக்கு இந்த அளவு 500 மி.லி. முதல் 1000 மி.லி. என தேவைக்கு ஏற்றாற்போல வரை அதிகரிக்கும்.

பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் புரதம), லாக்டோஸ் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. பாலிலிருந்து பல உபப்பொருட்களைப் பெறலாம் என்பதால் பாலின் விலை உயர்வு, பல்வேறு பொருட்களின் விலையையும் உயர்த்திவிடும். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பனீர் என பல பால்பொருட்களை நாம் தினசரி பயன்படுத்துகிறோம்.

மேலும் படிக்க | பால் கறக்கும்போது முகத்தில் விழுந்த சாணி: வாலை பிடித்து கடித்த பெண் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News