குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாபுபா மானக் வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


குறைபாடுள்ள வேட்பு மனுவை பாஜக வேட்பாளர் மானக் தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது  வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியும் காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இவ்வழக்கு விசாரணையின்போது, மானக்கின் வேட்பு மனுவில் தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்றும், மக்கள் அளித்த தீர்ப்பின்படி மானக்கை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். 


இவ்வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, துவாரகா சட்டமன்ற உறுப்பினர் பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். 


இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.