வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடடப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வண்ணங்களின் திருவிழா என்று வர்ணிக்கப்படும் ஹோலி பண்டிகை, வடமாநிலங்களில் களைகட்ட தொடங்கியுள்ளது. ஹோலி பண்டிகை ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். 


டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆண்டுதோறும் ஹோலிப் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் பெரியோர் முதல் சிறியவர் வரை வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றவர் மீது பரஸ்பரம் பூவதும், பல வண்ணங்கள் கலந்த நீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் வழக்கம்.


அந்தவகையில் வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது.


வடமாநிலங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.