`மக்களுக்கு புரிகிறது... எதிர்க்கட்சிகளுக்குதான் விளங்கவில்லை`: குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மனம் திறந்த அமித் ஷா
Home Minister Amit Shah on CAA:குடியுரிமை திருத்தச் சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ -க்கு அளித்த பேட்டியில் அவர், இதில் பாஜக தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றார்.
Home Minister Amit Shah on CAA: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இது ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளாது. ஆதரவும் எதிர்ப்புமாய் சிஏஏ என்ற சத்தம் நாடெங்கிலும் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து மக்களிடையே பல கேள்விகளும் உள்ளன. பல மாநிலங்கள் இதை ஏற்க மறுத்துள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில், குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ -க்கு அளித்த பேட்டியில் அவர், இதில் பாஜக தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று கூறியுள்ளார். இந்திய குடியுரிமையை உறுதி செய்வது இந்தியாவின் இறையாண்மையின் முடிவு என்று அவர் மேலும் தெரிவித்தார். இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் சிஏஏ (CAA) ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிஏஏ அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல: அமித ஷா
CAA அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற விமர்சனத்தை மத்திய அமைச்சர் நிராகரித்தார். இதில் அரசியலமைப்பு விதிகளை மீறும் விஷயங்கள் எதுவும் இல்லை என அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் அவ்வப்போது விதி 14 பற்றி பேசுகிறார்கள் என்றும் அந்தப் பத்தியில் இரண்டு பிரிவுகள் இருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள் என்றும் உள்துறை அமைச்சர் நினைவுபடுத்தினார். 'இந்த சட்டம் சட்டப்பிரிவு 14 ஐ மீறும் சட்டமல்ல. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அகதிகளுக்கு இது குடியுரிமை வழங்கும். இது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது' என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு
ஆட்சிக்கு வந்தால் சிஏஏவை ரத்து செய்வேன் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அமித் ஷா, ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும் என்று கூறினார். 'CAA கொண்டு வந்தது பாஜக. நரேந்திர மோடி தலைமையிலான எங்கள் அரசு இதனை கொண்டு வந்துள்ளது. அதை ரத்து செய்ய இயலாது.' என்றார். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும், சிஏஏ -வை மத்திய அரசு அமல்படுத்திய நேரம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகின்றது. சிஏஏ அமல்படுத்தப்பட்ட நேரம் பற்றி கேர்கப்பட்ட்ட கேள்விகு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'அசாதுதீன் ஒவைசி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பொய் அரசியல் செய்கின்றனர். நேரம் பற்றிய கேள்வியே இல்லை. 2019 ஆம் ஆண்டிலேயே பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.' என்றார்.
எதிர்க்கட்சிகளின் அரசியல்
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது உலகையே ஆட்கொண்ட கொரோனா பெருந்தோற்றால் அதை செயல்படுத்துவது தாமதமானதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 'சமாதான அரசியல் மூலம் தங்கள் வாக்கு வங்கியை வலுப்படுத்த எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. தங்கள் கருத்துகளின் மூலமாகவே எதிர்கட்சிகளின் உண்மை முகங்கள் அம்பலமாகி வரருகின்றன. CAA என்பது இந்த நாட்டின் சட்டம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்களவைத் தேர்தலுக்கு (Lok Sabha Election) முன் அமல்படுத்தப்படும் என கடந்த 4 ஆண்டுகளில் 41 முறை கூறியுள்ளேன்.' என்று அமித் ஷா தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ