கொல்கத்தா: 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் தேர்தல் உத்தி குறித்து ஆலோசனை செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit shah), நவம்பர் 5 முதல், இரண்டு நாட்களுக்கு மேற்கு வங்க பயணம் மேற்கொண்டு , கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க பாஜக (BJP) பொதுச் செயலாளர் சயந்தன் பாசு வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த வளர்ச்சியில், நவம்பர் 6 முதல் அதன் தேசியத் தலைவர் ஜே பி நாடாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.


"ஜே.பி. நட்டா ஜியின் (J.P.Nadda) வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 5 முதல் இரண்டு நாட்கள், அமித் ஷா அவர்கள் இரண்டு நாள் மேற்கு வங்காளத்தில் இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நவம்பர் 5 ஆம் தேதி மற்றும் அடுத்த நாள் மேதினிபூர் மாவட்டத்திற்கு வருவார். அவர் இங்குள்ள கட்சித் தலைவர்களைச் சந்திப்பார் "என்று பாசு கூறினார்.


பீகார் (Bihar)சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில்  மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் நிர்வாக ரீதியிலான  பல்வேறு  அம்சங்களை ஆராய்ந்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் மூலோபாயம் குறித்து விவாதிப்பார் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும் வங்காள பொறுப்பாளருமான கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்தார்.


தனது மேற்கு வங்க பயணத்தின் போது, ​​அமித் ஷா அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான விஜயவர்கியா, துணைத் தலைவர் முகுல் ராய் மற்றும் மாநிலத் தலைவர் திலீப் கோஷ் ஆகியோருடன் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் உரையாடுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


ALSO READ | பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்த கடல் விமானத்தின் முக்கிய அம்சங்கள்..!!!


இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கு வங்கத்திற்கான (West Bengal)மெய்நிகர் பேரணியில் ஷா உரையாற்றிய போதிலும், கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனுக்கு பிறகு அவர் மாநிலத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது இருக்கும்.


அவர் கடைசியாக மேற்கு வங்கத்திற்கு மார்ச் 1 ம் தேதி பயணம் செய்தார்.


மேற்கு வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவது குறித்து விமர்சித்து வருவதால் அடுத்த வாரம் உள்துறை அமைச்சரின் வருகை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.


கடந்த சில ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பாஜகவின் வலிமை பன்மடங்கு அதிகரித்து வருவதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் 10 ஆண்டு ஆட்சியை, பாஜக முடிவுக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.


ALSO READ | கொரோனாவிலும் 45,000 கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்து அசத்தும் முதல்வர் யோகி..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR