மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில், ஹைதராபாத்தை சேர்த MBA மாணவி ஒருவர் தன் நண்பருடன் Video call பேசிக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் நேற்றைய தினம், கோம்பாளி பகுதியில் அம்மாணவி தங்கியிருந்த விடுதியில் நடைப்பெற்றுள்ளது. B ஹனிஷா சௌத்ரி (24) என்னும் அவர் ஆந்திராவின் அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர். சிவானி மேளான்மை கல்லூரியில் MBA பயின்று வந்துள்ளார்.


சம்பவம் நடந்த அன்று விடியற்காலை அவர் தனது காதலர் தீக்ஷட் பாட்டில் உடன் Video Call-ல் பேசியுள்ளார். அவர் தான் தற்கொலை செய்துக்கொண்ட போது Video Call பேசியதற்கான உறுதிபூர்வ ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனினும் அவர் அன்று அவர் இறப்பதற்கு முன்னதாக அவரது காதலருடன் Video Call பேசியது உறுதி படுத்தப்பட்டுள்ளது.


அவர்கள் இரவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு மனவேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிகிறது. சம்பவத்தன்று தனது காதலியின் மரணத்தை Video Call மூலம் பார்த்த தீக்ஷட், ஹனிஷா-வின் விடுதிக்கு சென்றுள்ளார். 


எனினும் அவரை காப்பாற்ற இயலவில்லை, பின்னர் ஹனிஷா-வின் உடல் செக்கன்திராபாத் காந்தி மருத்துவமனைக்கு ப்ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காவல்துறையில் வழக்கு தொடுத்துள்ளனர்.