தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என பதிவிட்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடந்து வீட்டில் தனிமையில் இருந்த மு.க. ஸ்டாலின் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வரின் மருத்துவ பரிசோதனை குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்திருந்தது.


 



தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை நடக்கும் சூழலில், “முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு மேற்கொண்டு சில நாள்கள் ஓய்வு தேவை” என இன்று தெரிவித்துள்ளது.


இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மு.க. ஸ்டாலின் விரைவில் நலம்பெற வேண்டுமென்று ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல் மந்திரி மு.க.ஸ்டாலின் விரைவில் குணம் அடைய வாழ்த்துகிறேன். அவர் விரைந்து நலம் பெற்று, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


 



முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்வி - விசாரணைக்கு அரசு உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ