ICAI CA Foundation December Result 2022 declared: இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (Institute of Chartered Accountants of India) இன்று சிஏ ஃபவுண்டேஷன் டிசம்பர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. முடிவை அதிகாரப்பூர்வ இணையதளமான icai.nic.in இல் காணலாம். தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரெஜிஸ்டர்/செக்யூரிட்டி எண் மற்றும் ரோல் எண் கொண்டு லாக் இன் செய்து முடிவுகளை காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ICAI CA Foundation result Dec 2022: தேர்வு முடிவுகளை இந்த இணையதளங்களில் காணலாம்


- icai.org
- icai.nic.in



ICAI CA Foundation Result 2022: இந்த முறையில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்: 


- ஐசிஏஐ அதிகாரப்பூர்வ இணையதளமான icai.org-க்கு செல்லவும்.


- முகப்புப் பக்கத்தில், "சிஏ ஃபவுண்டேஷன் ரிசல்ட் டிசம்பர் 2022 டவுன்லோட்" லிங்கில் டேப் செய்யவும். 


- உங்கள் லாக் இன் கிரென்ஷியல்சை (உள்நுழைவு சான்றுகளை) உள்ளிடவும்.


- ICAI CA ஃபவுண்டேஷன் டிசம்பர் 2022 புதிய சாளரத்தில் தோன்றும்.


- தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். 


தேர்வுகள் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றன


ICAI ஆனது CA ஃபவுண்டேஷன் டிசம்பர் தேர்வை டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20, 2022 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தியது. இந்தத் தேர்வில் நான்கு தாள்கள் இருந்தன. தாள்-1 மற்றும் தாள்-2 மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், தாள் 3 மற்றும் 4 மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடத்தப்பட்டன.


மேலும் படிக்க | #PIBFactCheck: 10ம் வகுப்பு தேர்வு இனி கிடையாது... வைரலாக பரவும் செய்தி! உண்மை என்ன!


ஹிராஜ் கண்டேல்வால் ட்வீட் செய்திருந்தார்


முன்னதாக, ஐசிஏஐ-ன் சிசிஎம் ஹிராஜ் கண்டேல்வால் ட்வீட் செய்து, சிஏ ஃபவுண்ஏஷன் டிசம்பர் 2022 இன் முடிவைப் பற்றி தெரிவித்திருந்தார். அவர் தனது ட்வீட்டில், "சிஏ ஃபவுண்டேஷன் முடிவு தேதி தொடர்பான அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன். சிஏ தேர்வு முடிவுகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இறுதி தேதி தகவல் விரைவில் வழங்கப்படும். இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ICAI காத்திருக்கவும்.” என தெரிவித்திருந்தார். 


இன்று தேர்வு முடிவுகள் வந்துள்ளதை அடுத்து இது தொடர்பான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | வருகிறது வந்தே பாரத் மெட்ரோ... சிறப்பம்சம் என்னென்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ