Vande Bharat Metro: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மினி வெர்ஷனாக, 'வந்தே மெட்ரோ' சேவைகள் நாட்டில் விரைவில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வந்தே மெட்ரோவின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் இந்தாண்டு நிறைவடையும். பெரிய நகரங்களில் உள்ள மக்கள் தங்கள் வேலை செய்யும் இடம் மற்றும் சொந்த ஊர்களுக்கு இடையே வசதியாக பயணிக்க உதவும் நோக்கத்துடன் வந்தே மெட்ரோ சேவைகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,"ஒரு மாநிலத்தில் அருகில் உள்ள பகுதிகளின் பயணிகளுடைய பயணத்தை எளிதாக்கும் வகையில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில், இந்தியா முழுவதும் தயாரிக்கப்பட இருக்கும் வந்தே மெட்ரோ ரயில்கள் விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
வந்தே மெட்ரோவை நாங்கள் உருவாக்குகிறோம். பெரிய நகரங்களைச் சுற்றியுள்ள மக்கள் அந்த பெரிய நகரங்களுக்கு வேலை அல்லது வேறு பணிகளுக்காக வந்து, தங்கள் சொந்த இடத்திற்குச் செல்ல விரும்பும் நிலை உள்ளன. அதற்காக, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சமமான வந்தே மெட்ரோவைக் கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறைவடைந்து, அடுத்த நிதியாண்டில், ரயிலின் உற்பத்தி தீவிரப்படுத்தப்படும்" என்றார்.
வந்தே மெட்ரோ: சிறப்பம்சங்கள்
அரை அதிவேக வந்தே பாரத் ரயில்களின் (Semi-High Speed Vande Bharat) ஸ்லீப்பர் பதிப்பு ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது.
எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில்கள், மெட்ரோ ரயில் போன்று உருவாக்கப்பட உள்ளன.
வந்தே பாரத் மெட்ரோ பயணிகளுக்கு விரைவான சேவையை அளிக்கும்.
பெரிய நகரங்களுக்கு அருகாமையில் குடியிருக்கும் மக்கள் தங்கள் பகுதியில் இருந்து பெரிய நகரங்களில் உள்ள அலுவலகங்களுக்கு வசதியாக பயணிக்க உதவும் வகையில் வந்தே மெட்ரோ உருவாக்கப்பட்டு வருகிறது.
எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் மெட்ரோ ரயில்களின் பெட்டிகளை விரைவில் வெளியிடுமாறு சென்னையை தளமாகக் கொண்ட இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) மற்றும் லக்னோவைச் சேர்ந்த ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RTSO) ஆகியவற்றின் பொது மேலாளர்களுக்கு (GM) ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது,"வந்தே பாரத் ரயில்களை குறுகிய கார் அமைப்புடன் இயக்கும் முடிவு பயணிகளுக்கு, குறிப்பாக வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு பெரிய நகரங்களுக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு ஒரு வரமாக இருக்கும். சாதாரண வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகளைக் கொண்டவை. வந்தே பாரத் ரயில்கள் இப்போது ICF சென்னையைத் தவிர லத்தூர் (மகாராஷ்டிரா), சோனிபட் (ஹரியானா), ரேபரேலி (உத்தர பிரதேசம்) ஆகிய இடங்களிலும் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த அறிவிப்புகள் நேற்றைய பட்ஜெட்டில் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | Budget 2023: கார் வாங்கியவர்களுக்கு ஷாக் கொடுத்த நிதியமைச்சர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ