அலட்சியமாக இருந்திருந்தால் டி.கே.சிவக்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும்
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் விவகாரத்தில் கொஞ்சம் தாமதம் செய்திருந்தால், அவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டிருக்கும் என மூத்த வழக்கறிஞரான அபிஷேக் மனுசின்வி கூறியுள்ளார்.
புதுடெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் தரப்பு வழக்கறிஞர்களான அபிஷேக் மனுசின்வி, முகுல் ரோஹ்தகி, தயான் கிருஷ்ணன் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டனர். முதலில் வாதிட்ட சிங்வி, 'டி.கே. சிவகுமாருக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்காமல் இருந்திருந்தால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தது. இது இரத்த அழுத்த சற்று அதிகமாக இருந்தது. அவர் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினையால் அவதிப்படுகிறார். ஆர் எம்.எல் மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்தார். இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படவில்லை. அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என வாதிட்டார்.
டெல்லியில் உள்ள இல்லத்தில் 8.59 கோடி கிடைத்தது டி.கே சிவகுமாருடையதல்ல. அவர் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. அமலாக்கத்துறையின் விசாரணை பாரபட்சமற்றது. அமலாக்க இயக்குநரகம் கூறிய குற்றச்சாட்டுகளின்படி 20 கணக்குகளில் 10 ஆண்டுகளில் 64 லட்சம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகவும், டி.கே. சிவகுமார் மொத்தம் 317 கணக்குகளைக் கொண்டிருப்பதாக அமலாக்கத்துறை ஒரு விசித்திரக் கதையைச் சொல்கிறது. இவை அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் அவர் வாதிட்டார்.
சிவகுமாரின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. அதனால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. எனவே அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் முறையிடப்பட்டது.