லட்சாதிபதி ஆசையில் 27 லட்சம் பறிகொடுத்த ஜெய்ப்பூர் இளைஞர்
மோசடி வலையில் சிக்கிக் கொண்ட ஜெய்ப்பூர் இளைஞர். ரிலையன்ஸ்-லுலு மால் போன்ற ஆப்கள் சிக்கித் தவிப்பு.
கற்பனை செய்து பாருங்கள், உங்கள் மொபைலில் திடீரென ஒரு செய்தி வருகிறது... அதில் 10 ரூபாய் முதலீடு செய்து பில்லியனர் ஆகுங்கள் என்று செய்தி அனுப்பப்படுகிறது. இதற்கு ஒன்று மட்டும் செய்ய வேண்டும். நீங்கள் பச்சை அல்லது சிவப்பு நிறத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம் என்று செய்தி வருகிறது.
சில மோசடி பயன்பாடுகள் இது போன்ற பேராசையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதன்படி ஜெய்ப்பூரின் விஜய்யும் இதே வலையில் தற்போது சிக்கிக்கொண்டுள்ளார். சுமார் 3 மாதங்களுக்கு முன்பு டெலிகிராம் செயலியின் குழுவில் இருந்து விஜய்க்கு இப்படி ஒரு கேம் தெரிய வந்தது. இந்தியாவில் முதன்முறையாக இதுபோன்ற முதலீட்டு செயலி வந்துள்ளதாகவும், அதில் 10 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி
இந்த ஏலத்தை வைத்து வெற்றி பெற தைரியம் வேண்டும். விஜய் முதல்முறையாக விளையாடியபோது 100 ரூபாய் முதலீடு செய்து 3000 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். இவர் கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசையில், விஜய் தனது சேமிப்பான 27 லட்சம் ரூபாயை இந்த விளையாட்டில் முதலீடு செய்தார். சில நேரங்களில் சிவப்பு மற்றும் சில நேரங்களில் பச்சை பொத்தானை அழுத்துவதன் மூலம், விஜய்யின் மொத்த பணமும் அந்த செயலியை இயக்கிய தலைவரின் வங்கி கணக்கில் சென்று விட்டது.
விஜய்யின் அழிவு கதை ஒரு உதாரணம். இன்னும் சொல்லப்போனால் சீன நிறுவனங்களின் இந்த கேமுக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் பலியாகி வருகின்றனர்.
உண்மையில், இது கேமிங் ஆப் அல்ல. இது ஒரு வகையான ஆன்லைன் 'கலர் சத்தா' ஆகும், இது சீனாவிலிருந்து செயல்படுகிறது. அங்கிருந்து உருவாக்கப்பட்ட 15 முதல் 20 போலி ஆப்கள் மூலம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் சிக்கி வருகின்றனர். இந்த விளையாட்டின் விதிகள் மிகவும் ஆபத்தானவை.
சீனா ஆப் இந்தியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது
லுலு மால், ரிலையன்ஸ் மால், மந்திரி மால் போன்ற கேமிங் ஆப்ஸ் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஐடி மற்றும் சைபர் நிபுணர் தீபேந்திர சிங் சவுகான் கூறினார். இது இந்தியாவில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான விளையாட்டாகும். எனவே நீங்களும் சற்று ஜாக்கிரதையாக இருக்குங்கள்.
மேலும் படிக்க | IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய அம்சம்: மக்கள் ஹேப்பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ