கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை திறம்பட செயல்படுத்தும் விமான நிலையங்களில், உலகளவில் இரண்டாவது பாதுகாப்பான விமான நிலையம் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலைய ஆபரேட்டர் DIAL புதன்கிழமை தெரிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பான பயண காற்றழுத்தமானி (Safe Travel Barometer) எடுத்த முன்முயற்சியில், பாதுகாப்பான பயண தரக் குறியீடு தொடர்பாக எடுத்த மதிப்பீட்டில், COVID-19 தொற்றுநோய் பரவல் நேரத்தில், சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என்பது தொடர்பாக 200 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை  மதிப்பீடு செய்தது.


பயணிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்காணிப்பதற்கான உலகின் மிகச் சிறந்த கருவியாக பாதுகாப்பான பயண காற்றழுத்தமானி (Safe Travel Barometer) உள்ளது என்று DIAL வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5 இல் 4.7 மதிப்பெண்களைப் பெற்று சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் முதலிடத்தில் உள்ளது, டெல்லியின் IGI விமான நிலையம் 4.6 மதிப்பெண்களைப் பெற்று பாதுகாப்பான பயண காற்றழுத்தமானியின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.


"தவிர, பிராங்பேர்ட் விமான நிலையம் மற்றும் செங்டு ஷுவாங்லியு சர்வதேச விமான நிலையமும் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன, ஒவ்வொன்றும் 5 இல் 4.6 என்ற மதிப்பெண் பெற்றுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச ((IGI) விமான நிலையத்தை GMR தலைமையிலான கூட்டமைப்பு டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) இயக்குகிறது.


கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக டெல்லி விமான நிலையம் நாட்டின் பாதுகாப்பான விமான நிலையமாகவும் மாறியுள்ளது.


ALSO READ | விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு...!!!


"RT-PCR சோதனை ஆய்வகத்தைத் தொடங்கியது, பயணிகளின் வசதிக்காக, தொடாமல் இயங்க செய்யகூடிய வசதிகளை ஏற்படுத்துதல், அல்ட்ரா வயலட் அடிப்படையிலான கிருமிநாசினி செயல்முறை மற்றும் இந்தியாவுக்குச் செல்லும் சர்வதேச பயணிகள் மிகவும் எளிதான முறையில் பயணத்தை மேற்கொள்வதற்கு உதவும் ஏர் சுவிதா போர்ட்டலை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்," என டயல் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.


டயல் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இந்த சோதனை நேரத்தில், விமான நிலையத்தில் பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உலகில் இரண்டாவது இடத்தில் இருப்பதன் மூலம் டயல் சாதனை செய்துள்ளது எனக் குறிப்பிட்டார்.


பாதுகாப்பான பயண காற்றழுத்தமானி (Safe Travel Barometer) என்பது பயணிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்காணிக்க ஒரு விரிவான கருவியாகும்


ALSO READ | சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்... காரணம் என்ன..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR