IMD: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை கொட்டும்
Weather Forecast: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்த வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதன் காரணமாக தமிழகத்தின் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை, சென்னை நகருக்கு தென்கிழக்கே 420 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, 2022 நவம்பர் 21 அன்று 1130 மணிநேர IST இல் மையம் கொண்டு அதே பகுதியில், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 350 கி.மீ தொலைவில், நெல்லூருக்கு கிழக்கே தென்கிழக்கே 420 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து 470 கி.மீ தெற்கே தென்கிழக்கே மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து (இலங்கை) வடகிழக்கே 500 கி.மீ. நிலை கொள்ளும்.
இது நவம்பர் 21 ஆம் தேதி மாலை வரை வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் நள்ளிரவு வரை காற்றழுத்த தாழ்வு நிலையாகவே தொடரும். பிறகு மேற்கு வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அதன்பிறகு, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில், தெற்கு ஆந்திரப் பிரதேசம், வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, 22ம் தேதி காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.
இந்த வானிலை முன்னறிவிப்பின்படி, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு-வடமேற்கு திசையில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"வங்காள விரிகுடாவில் வானிலை அமைப்பு (தாழ்வுநிலை) சென்னைக்கு தெற்கே 420கிமீ தொலைவில் உள்ளது ;மேற்கு-NW வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..நவ.22-ம் தேதிக்குள் அது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும்.
2 நாட்கள் கனமழை எச்சரிக்கை
கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்தார். வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கடலோர பகுதி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
மேலும் படிக்க | சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ