வானிலை தகவல்: இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

வானிலை தகவல்: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 12, 2021, 01:34 PM IST
வானிலை தகவல்: இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் title=

வானிலை தகவல்: நேற்றைய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது. ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி (1.5 கிலோ மீட்டர் உயரம் ) வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மற்ற நாட்களில் வானிலை எவ்வாறு இருக்கும்?
13.11.2021: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் ,திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான  மழையும் பெய்யக்கூடும்.

14.11.2021: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், புதுவை, காரைக்கால் கடலூர் மற்றும் ஏனைய வட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

15.11.2021: வேலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான  மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான  மழையும் பெய்யக்கூடும்.

ALSO READ |  LIVE TN Weather Update: அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்புகளை வழங்க முதல்வர் உத்தரவு: செந்தில் பாலாஜி

16.11.2021: நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும். 

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்:
இன்று வங்க கடல் பகுதிகளான குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல இன்று மற்றும் நாளை அரபிக்கடல் பகுதிகளான கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

மிக கனமழை 4  இடங்களிலும் கனமழை 24 இடங்களிலும்  பதிவாகியுள்ளது

ALSO READ | மறுபடியும் மழையா? சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு!

15 சென்டிமீட்டர் மழை பதிவு:
சுரலாகோடு (கன்னியாகுமரி) 

14 சென்டிமீட்டர் மழை பதிவு:
கன்னிமார் (கன்னியாகுமரி), ஏற்காடு ISRO (சேலம்)

13 சென்டிமீட்டர் மழை பதிவு:
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி).

12 சென்டிமீட்டர் மழை பதிவு:
திருத்தணி (திருவள்ளூர்) 12, 

11 சென்டிமீட்டர் மழை பதிவு:
வாலாஜா (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி).

10 சென்டிமீட்டர் மழை பதிவு:
மயிலாடி (கன்னியாகுமரி), சோழவரம் (திருவள்ளூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை)

9 சென்டிமீட்டர் மழை பதிவு:
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 9, 

8 சென்டிமீட்டர் மழை பதிவு:
டிஜிபி அலுவலகம் (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை).

ALSO READ | மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு 15 நாள் அவகாசம்- அமைச்சர்

7 சென்டிமீட்டர் மழை பதிவு:
எம்ஜிஆர் நகர் (சென்னை), அய்யனாவரம் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), ஏற்காடு (சேலம்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கலவை (இராணிப்பேட்டை), கொட்டாரம் (கன்னியாகுமரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), காட்பாடி (வேலூர்)

6 சென்டிமீட்டர் மழை பதிவு:
எம்ஆர்சி நகர் (சென்னை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தரமணி (சென்னை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), சென்னை (நுங்கம்பாக்கம்), தருமபுரி (தருமபுரி), தர்மபுரி (தருமபுரி), ஆலந்தூர் (சென்னை), ஆம்பூர் (திருப்பத்தூர்), செங்கம் (திருவண்ணாமலை), திருவண்ணாமலை (திருவண்ணாமலை).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News