COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் மிக அதிக அளவாக, ஒரே நாளில், கோவிட்-19 தொற்று  புதிதாக 76,000 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
 
இரண்டு முக்கிய தேர்வுகள், ஜே.இ.இ (மெயின்ஸ்), நீட் - செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. மாணவர்கள் எளிதாக தேர்வுகளை எழுத, மாநில அரசுகள் பூட்டுதல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற நிலை உள்ளது.


புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 76,472 பேருக்கு புதிதாக கோவிட் -19 தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 34 லட்சதை தாண்டியுள்ளது. 


நாட்டில் COVID-19 தொற்று எண்ணிக்கை இப்போது 34,63,973 ஆக உள்ளது, இதில் 7,52,424 பேர் ஆக்டிவ் நோயாளிகள் 26,48,999 குணமடைந்துள்ளனர். 62,550 பேர் இறந்து விட்டனர்.


மேலும் படிக்க | JEE, NEET 2020: மருத்துவ, பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் என்ன ஆகும்..!!!


1. உள்துறை அமைச்சகம் விரைவில் அன்லாக் 4 க்கான வழிகாட்டுதல்களை வெளியிடும். 


2. நாட்டில் COVID-19 நோயிலிருந்து குணமடையும் விகிதம் 76.28 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆனால் தொற்றுநோய் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.


3. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்தியாவில்,  18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


4. நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் செப்டம்பர் 14 முதல் தொடங்கும். அமர்வுக்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாக COVID-19 பரிசோதனையை செய்து கொள்ளும்படி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


5. முகமூடி அணியாததற்காக ரூ .1000 அபராதம் விதிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தற்போது, ​​மாநிலத்தில் முகமூடி அணியாதவர்களுக்கான அபராதம் ரூ .200 முதல் ரூ .500 வரை உள்ளது.


6. இரண்டு முக்கிய தேர்வுகள் - ஜே.இ.இ (மெயின்ஸ்), நீட் - செப்டம்பர் மாதம் நடைபெறுவதால், மாணவர்கள் தேர்வு எழுத ஏதுவாக மாநில அரசுகள் தளர்வுகள் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.


மேலும் படிக்க | பீகார் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட முடியாது என SC அதிரடி