பீகார் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட முடியாது என SC அதிரடி

தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட முடியாது  எனக் கூறி COVID-19 காரணமாக பீகார் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

Written by - ZEE Bureau | Last Updated : Aug 28, 2020, 10:17 PM IST
  • அசாதாரண சூழ்நிலைகளில் வாக்கெடுப்புகளை ஒத்திவைக்க, மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் அனுமதி வழங்குகிறது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிக்கை எதுவும் வெளியிடப்படாத நேரத்தில், இந்த மனு அர்த்தமற்றது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பீகார் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட முடியாது என SC அதிரடி

பாட்னா: பீகாரில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை,   சட்டமன்றத் தேர்தலை ஒத்தி வைக்கக்கோரும் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) தள்ளுபடி செய்தது.

இந்திய தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் பரிசீலிக்கும் என்று நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச் கூறியதாக பி.டி.ஐ. தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஆர் எஸ் ரெட்டி மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பிரிவு, சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிக்கை எதுவும் வெளியிடப்படாத நேரத்தில், இந்த மனு அர்த்தமற்றது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட முடியாது  எனக் கூறி COVID-19 காரணமாக பீகார் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

அசாதாரண சூழ்நிலைகளில் வாக்கெடுப்புகளை ஒத்திவைக்க, மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் அனுமதி வழங்குகிறது என்ற அடிப்படையில் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி மனுதாரர் அவினாஷ் தாக்கூர், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இது தொடர்பாக உத்தரவு இட வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதிமன்ற பிரிவு, தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், தேர்தலை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் தேர்தல் குழுவுக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறியது.

தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்றும், ஒவ்வொரு சூழ்நிலையையும் ECI கருத்தில் கொள்ளும் என்றும் நீதிமன்ற பிரிவு கூறியது.  தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க | JEE, NEET 2020: மருத்துவ, பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் என்ன ஆகும்..!!!

More Stories

Trending News