சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் புதன்கிழமை நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட 11 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த 10 ஜவான்களும் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் (DRG) பிரிவை சேர்ந்தவர்கள். இதுதவிர ஓட்டுநர் ஒருவரும் பலியாகியுள்ளார். அரன்பூரில் நக்சலைட்கள் நடத்திய இந்த தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மூண்ட மோதல் நீடித்து வருகிறது. நக்ஸல் தாக்குதலில் பலியான ஜவான்கள் ரோந்து முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் வாகனத்தை IED ரக குண்டை வீசி தாக்கி வெடிக்கச் செய்தனர். சம்பவத்திற்குப் பிறகுன் அறிக்கை வெளியிட்ட, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், குற்றவாளிகள் தப்ப முடியாது என்று கூறினார். நக்சலைட்டுகளுக்கு எதிரான எங்களது போராட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது. திட்டமிட்ட முறையில் நக்சலிசம் வேரறுக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாக்குதல் சம்பவம் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்காக வந்த டிஆர்ஜி படை மீது IED வெடிகுண்டு தாக்குதலில் 10 DRG ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்த செய்தி வெளியானது. தண்டேவாடாவின் அரன்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் இவர்கள் மரணம்  மிகவும் வருத்தமாக இருக்கிறது. மாநில மக்கள் அனைவரும் வீர மரணம் அடைந்த ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 


நக்ஸல் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பூபேஷ் பாகேலுடன் தொலைபேசியில் பேசினார். மறுபுறம், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங், பூபேஷ் டிங்  பாகேலை விமர்சித்துள்ளார் . தாக்குதல் நடக்கும் போதெல்லாம், பாகேல் அதையே கூறுகிறார், ஆனால் அவர் இது வரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்காத வரை, இந்தப் பிரச்னை தொடரும் என்று ராமன் சிங் கூறினார்.


மேலும் படிக்க | செல்போனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. பெற்றோர்களே உஷார் 


இந்நிலையில், நக்சலைட்டுகளை சமாளிக்க கூடுதல் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் 2021 புள்ளிவிவரங்களின்படி, சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்புக்குள்ளான 8 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் தண்டேவாடா, பஸ்தார், சுக்மா, பிஜப்பூர், காங்கர், நாராயண்பூர், ராஜ்நந்த்கான் மற்றும் கொண்டகான் ஆகியவை. ஏப்ரல் 2021 இல், உள்துறை அமைச்சகம் மக்களவையில் 2011 முதல் 2020 வரை அதாவது 10 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் 3 ஆயிரத்து 722 நக்சலைட் தாக்குதல்கள் நடந்ததாகவும், அதில் 489 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க |  அதிர்ச்சி தந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு... 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயர்!


மேலும் படிக்க | ஹர ஹர மகாதேவா முழக்கத்துடன் யாத்ரீகர்களுக்காக திறக்கப்பட்ட கேதார்நாத் கோவில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ