புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27, 2020) 75,760 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டின் கோவிட் -19 தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 நாட்டில்  COVID-19 பாதிப்பு உள்ள ஆக்டிவ்  நோயாளிகள் 7,25,991 எனவும், 25,23,771 பேர் குண்மடைந்துள்ளனர் எனவும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MOHFW) தரவுகள் கூறுகின்றன.


தொற்று நோயினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60,472  என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.


COVID-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடையும் விகிதம் 76.24% ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


1,73,195  ஆக்டிவ் நோயாளிகள் உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மேலும் 23,089 நோயாளிகள் மாநிலத்தில் இந்த நோயால்  இறந்து விட்டனர்.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அளித்துள்ள தரவுகளின் படி, புதன்கிழமை 9,24,998 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 3.85 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, டெல்லியில் முண்மடையும் விகிதம் 90 சதவீதமாகவும், தமிழகத்தில் 85 சதவீதமாகவும் உள்ளது. 83.80 சதவீதம் குணமடையும்   விகிதத்துடன் பீகார் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமன் மற்றும் டியு மற்றும் தாத்ரா நகர் ஹவேலி (82.60 சதவீதம்), ஹரியானா (82.10 சதவீதம்), குஜராத் (80.20 சதவீதம்) என்ற நிலையில் உள்ளன.


அஸ்ஸாம் நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதமாக 0.27 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து கேரளாவில், 0.39 சதவீதமாகவும் உள்ளது.


மேலும் படிக்க | வங்கி துறை பாதுகாப்பான துறையாக உள்ளது: RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ்