ஒடிசா விபத்து: பாலசோரில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு  CBI கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருண் மஹந்தோ, முகமது அமீர்கான் மற்றும் பப்பு ஆகிய 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. IPC 304 பகுதி 2, 34 r/w 201 IPC மற்றும் 153 ரயில்வே சட்டத்தின் கீழ் புவனேஸ்வர் நீதிமன்றத்தில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ரயில்வே ஊழியர்கள் அருண் குமார் மஹந்தோ, முகமது அமீர்கான் மற்றும் பப்பு டெக்னீஷியன் ஆகிய 3 பேரை சிபிஐ கடந்த ஜூலை 7ம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று அதிகாரிகள் கைது


ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் கைது செய்யப்பட்ட மூன்று ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த அதிகாரிகளின் பெயர்கள் அருண் குமார் மஹந்தோ, முகமது அமீர்கான் மற்றும் பப்பு டெக்னீஷியன். அவர்கள் மீது கொலை மற்றும் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஜூலை 7ஆம் தேதி இந்த மூவரையும் சிபிஐ கைது செய்தது தெரிந்ததே.


சமிக்ஞை அமைப்பு செயலிழப்பு


சிபிஐ தவிர, ரயில்வே வாரியம் சார்பில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் (சிஆர்எஸ்) இந்த விவகாரத்தை விசாரித்துள்ளார். ஜூலை 3 அன்று, CRS 40 பக்க அறிக்கையை வாரியத்திடம் சமர்ப்பித்தது. இதன்படி, லெவல் கிராசிங் லொகேஷன் பாக்ஸ் உள்ளே கம்பிகள் தவறாக லேபிளிடப்பட்டதால் தானியங்கி சிக்னல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. அதுவே விபத்துக்கு காரணமாக அமைந்தது. கிராசிங் லொகேஷன் பாக்ஸில் கம்பிகள் தவறாகப் பெயரிடப்பட்டிருப்பது பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் இருந்தது.


மேலும் படிக்க | ஒடிஷா ரயில் விபத்து... ‘காணாமல் போன’ ஜூனியர் இன்ஜினியர் வீட்டுக்கு சீல் வைத்த CBI..!


295 பேர் உயிரிழந்துள்ளனர்


ஜூன் 2 ஆம் தேதி மாலை, சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த மெயின் லைனுக்குப் பதிலாக லூப் லைனில் நுழைந்தது என்று உங்களுக்குச் சொல்வோம். சரக்கு ரயில் மீது ரயில் மோதியது. கோரமண்டல் மற்றும் சரக்கு ரயிலின் சில பெட்டிகள் அடுத்தடுத்த தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. இதையடுத்து சிறிது நேரத்தில் ஹவுரா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சிதறி கிடந்த பெட்டிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 295 பேர் உயிரிழந்ததாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு


எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறுதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்த ரயில் விபத்து ஏற்பட காரணமானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.  ரயில்வே சிக்னலைக் கட்டுப்படுத்த எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பயன்படுத்துகிறது. இது ஒரு பாதுகாப்பு அமைப்பு. ரயில்களின் பாதுகாப்பிற்காக சிக்னல்கள் மற்றும் சுவிட்சுகளுக்கு இடையிலான ஆபரேடிங் சிஸ்டம் அமைப்பை இது, கட்டுப்படுத்துகிறது. இந்த அமைப்பின் மூலம், ரயில்வே தடங்களில் ஓடும் ரயில்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், இதன் மூலம், ரெயில் யார்டின் பணிகள்  கட்டுப்படுத்தப்பட்டு ரயில் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டு, ரயில் பாதுகாப்பாக ரயில் தடத்தை கடப்பதை உறுதி செய்கிறது. 


மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா... மனித தவறா... - சாத்தியக்கூறுகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ