உலக அளவில் இந்தியாவை ஒரு பொருட்டாகவே கருதாத நாட்கள் இருந்தன; இந்த 5 ஆண்டுகளில் அனைத்தும் மாறியிருக்கிறது அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதலில் பேசி, நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "பாஜக ஆட்சியில், ஏழைகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், எந்தவித ஊழலும் நடைபெறவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையில் 50 முக்கிய முடிவுகளை எடுத்து உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டது போலவே, வரும் ஆண்டுகளிலும் நிறைவேற்றப்படும்" என்று கூறினார். 



மேலும் அவர் பேசுகையில், 2014 - 19 காலகட்டம் இந்தியாவின் சரித்திரத்தில் பொற்காலம். BJP ஆட்சியில், இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. தேச பாதுகாப்பு முக்கியமானது. அதனை உறுதி செய்துள்ளோம். 50 கோடி ஏழை மக்களுக்காக உழைத்துள்ளோம். வெளிப்படையான அரசுக்கு மோடி அரசு உதாரணம். 5 ஆண்டில் மிகப்பெரிய முடிவுகளை எடுத்துள்ளோம். இளைஞர்கள் விருப்பத்திற்கேற்ப பணியாற்றியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.