Income Tax Slab: இந்த வருமானத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும், உங்கள் வருமாத்திற்கு வரி எவ்வளவு?
Income Tax Slab: புதிய வரி முறையிலும், பழைய வரி முறையிலும், எவ்வளவு வருமானத்திற்கு 20% வரி வசூலிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
வருமான வரி: நாட்டு மக்கள், தாங்கள் பெறும் வருமானம், வருமான வரி வரம்பை மீறிப்போனால், அதற்கான வருமான வரியை செலுத்துகிறார்கள். மக்களின் வருமானம் அதிகரிக்கும்போது, சிலருக்கு வரி செலுத்தும் செயல்முறையும், சிலருக்கு வரித் தொகையை அதிகரிக்கும் செயல்முறையும் தொடங்குகிறது. வருமான வரிக்கு உட்பட்ட வருவாய் பெறும் அனைவரும் இந்த வரியை பெற வேண்டும். இந்தியாவில், வருமானத்தின் மீது வரி வசூலிக்க பல்வேறு வரி அடுக்குகள் (ஸ்லேப்) உள்ளன.
இந்த வரி அடுக்குகளின்படி, மக்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ற வரியை செலுத்த வேண்டும். இன்னும் சில வாரங்களில் மத்திய அரசும் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான சலுகையை அரசு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வரி செலுத்துவோர் இடையில் இருக்கின்றது. இப்போது பட்ஜெட்டுக்கு முன், வரி செலுத்துவோர் இது குறித்த பல முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார். அந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அவர் சமர்ப்பிக்கிறார்.
2021-22 நிதியாண்டுக்கு அரசாங்கத்தால் இரண்டு அடுக்குகளின்படி வரி வசூலிக்கப்படுகிறது. ஒன்று புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், வெவ்வேறு வருமானங்களில் 20 சதவீத வருமான வரியும் அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது. புதிய வரி முறையிலும், பழைய வரி முறையிலும், எவ்வளவு வருமானத்திற்கு 20% வரி வசூலிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
20 சதவீதம் வரி
புதிய வரி விதிப்பின்படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், அதற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். பழைய வரி விதிப்பு முறைப்படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை இருக்கும் வருமானத்துக்கு 20% வரி செலுத்த வேண்டும்.
இதற்கிடையில் இந்த முறை வரி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம், மத்திய அரசு தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ