Ladakh Standoff:லடாக் பகுதியில், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்தியா - சீனா எல்லையில் 15 மாதங்களாக தொடர்ந்து பதற்றம் நிலை வரும் நிலையில், ஒரு முக்கிய முன்னேற்றமாக கோக்ரா முனையிலிருந்து இரு நாட்டு படைகளும் பின் வாங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோக்ராவில் (Gogra Point) உள்ள எல்லை பகுதிகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் முழுமையாக கடைபிடிக்கப்படும் என இரு தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய இராணுவம் மேலும் கூறியது.


இது தொடர்பாக மேலும் தகவல்களை அளித்த ராணுவம், ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், படைகளை விலக்கில் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இரு தரப்பு துருப்புக்களும் இப்போது, லடாக் மோதலுக்கு முந்தைய நிலையை பராமரிப்பதாவும் ராணுவம் (Indian Army) தெரிவித்துள்ளது. கோக்ரா பாயிண்ட் (Gogra Point) ரோந்து பாயிண்ட் -17 என அறியப்படுகிறது. 


"லடாக் (Ladakh) பகுதியில், இரு தரப்பினராலும் உருவாக்கப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அகற்றப்பட்டு பரஸ்பரம் சரிபார்க்கப்பட்டன. இப்பகுதியில், கல்வான் மோதலுக்கு முந்தைய நிலை ஏற்பட்டுள்ளது ” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


கோக்ராவில் எல்லை பகுதி தொடர்பான ஒப்பந்தங்களை இரு தரப்பினராலும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்பதையும், தற்போதைய நிலையில் ஒருதலைப்பட்ச மாற்றம் இல்லை என்பதையும் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான ஒப்பந்தம் உறுதி செய்கிறது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. 


ALSO READ | Ladakh: நீண்ட போருக்கு தயாராகி வரும் இந்தியா; சீனாவை நம்பாததன் காரணம் என்ன..!!


"இதன்மூலம், பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், மேற்குத் பகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள எல்லை பிரச்சினைகளைத் தீர்க்கவும் இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர், ”என்று ராணுவம் தெரிவித்துள்ளது.


கிழக்கு லடாக் பகுதியை அரசு, மேற்கு துறை என குறிப்பிடப்படுகிறது. இந்திய இராணுவம் ITBP உடன் இணைந்து LAC பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய முழுமையாக இணைந்து பணியாற்றி வருகிறது. 


ALSO READ | LAC விவகாரம்: இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் 12வது பேச்சுவார்த்தை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR