LAC விவகாரம்: இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் 12வது பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் சீனா இடையேயான உயர்மட்ட தளபதிகள் அளவிலான 12வது சுற்று பேச்சுவார்த்தை சனிக்கிழமை லடாக் (Ladakh) பகுதியில் சீன பக்கம் உள்ள மோல்டோவில் நடந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 31, 2021, 03:12 PM IST
LAC விவகாரம்:  இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் 12வது பேச்சுவார்த்தை title=

இந்தியா மற்றும் சீனா இடையேயான உயர்மட்ட தளபதிகள் அளவிலான 12வது சுற்று பேச்சுவார்த்தை சனிக்கிழமை லடாக் (Ladakh) பகுதியில் சீன பக்கம் உள்ள மோல்டோவில் நடந்து வருகிறது.

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடக்கிறது. ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் 900 சதுர கிமீ டெப்சாங் சமவெளிகள் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்தியத் தூதுக்குழுவிற்கு லே பகுதியை சேர்ந்த XIV படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் PGK மேனன் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (கிழக்கு ஆசியா), நவீன் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். சீனா தரப்பிற்கு, சீன படையின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் தளபதி சூ கிலிங் (Xu Qiling)  தலைமை தாங்குகிறார்.

Depsang பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய தற்போதைய மோதலின் ஒரு பகுதியாக பேசப்படவில்லை. ஏனெனில் இந்த பகுதியில் 2013  ஆம் ஆண்டில் பதற்றம் ஏற்பட்டது.
சமீபத்திய இராணுவ தளபதி கூட்டங்களின் போது எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | PM Kisan Yojana: பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் பெரிய மாற்றம்

ஏப்ரல் மாதம் நடந்த, கமாண்டர் நிலையிலான 11 வது சுற்று பேச்சுவார்த்தையின்  போது, ​​கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் டெப்சாங் ஆகியவற்றில் நிலவும் பதற்றம் குறித்து பேசப்படவில்லை. பிப்ரவரி 20 அன்று, இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் 10 வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம் தணிந்தது.

இது வரை, 11 சுற்றுப் படைத் தளபதிகள் மட்டப் பேச்சுக்களைத் தவிர, இரு தரப்பினரும் மேஜர் ஜெனரல் நிலையில் 10 சுற்று பேச்சு வார்த்தைகளும், பிரிகேடியர் நிலையில் 55 சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தியுள்ளன.

எல்லை கட்டுப்பாட்டு கோடு முழுவதும் ராணுவ உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்தி  வந்த நிலையில், இந்தியாவும் தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.மேலும் சீன ஆக்கிரமிப்பைத் தடுக்க தனது முந்தைய தற்காப்பு அணுகுமுறையைப் போலல்லாமல், இந்தியா இப்போது இராணுவ ரீதியில் பதலடி தந்து வருகிறது. 

சீனாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையை மையமாகக் கொண்டு இந்தியா 50,000 படைகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. திபெத்திய பகுதியின் சீனா ​​இரட்டை என்ஜின்கள் கொண்ட போர் விமானங்களை நிலைநிறுத்த  நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.

கூடுதலாக, சீனா திபெத் இராணுவப் பகுதியிலிருந்து தெற்கு உத்தரகண்ட் கீழே உள்ள கரகோரம் வரம்பைக் கடந்து செல்லும் சின்ஜியாங் பகுதிக்கு துருப்புக்களையும் நிறுத்திள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் இரண்டு நாட்டு படைகளும் பாங்கோங் த்சோவின் இரு கரைகளிலிருந்தும் வெளியேறின என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | ஏன் விவசாயிகளின் கணக்கில் ரூ. 2000 செலுத்தப்படவில்லை? மத்திய அமைச்சர் விளக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News