Ladakh: நீண்ட போருக்கு தயாராகி வரும் இந்தியா; சீனாவை நம்பாததன் காரணம் என்ன..!!

லடாக்கில் உடன்பாடு  ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியா முதுகில் குத்தும் தன்மை கொண்ட சீனாவை நம்பவில்லை. மோடி அரசு நீண்ட 'போருக்கு' தயாராகி வருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 5, 2021, 04:11 PM IST
  • இந்தியா-சீனா பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்டன
  • லடாக்கில் நீண்ட 'போருக்கு' தயாராகும் மோடி அரசு.
  • இந்திய இராணுவம் எல்லை பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது
Ladakh: நீண்ட போருக்கு தயாராகி வரும் இந்தியா; சீனாவை நம்பாததன் காரணம் என்ன..!! title=

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் LAC பகுதியில் கடந்த ஆண்டு தொடங்கிய சீனாவுடனான எல்லை பிரச்சனை இன்னும் தொடர்கிறது. பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு, சமீபத்தில் ராணுவ தளபதியின் 12 வது சுற்று பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது, ​​இரு நாடுகளும் கோக்ரா ரோந்து நிலையத்திலிருந்து படைகளை திரும்பப் பெற ஒப்புக்கொண்டன. ஆனால், கடந்த கால அனுபவங்களால் இந்தியா சீனாவை நம்பவில்லை. சர்ச்சை முடிவுக்கு வந்து விட்டதாக மோடி அரசு கருதவில்லை.

லடாக்கில் நீண்ட 'போருக்கு' தயாராகும் மோடி அரசு

முதுகில் குத்தும் தனமை கொண்ட சீனாவுடன் ஏற்பட்டுள்ள கடந்தகால அனுபவங்களை கருத்தில் கொண்டு, நரேந்திர மோடி அரசு (PM Narendra Modi), கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நீண்ட 'போருக்கு' தயாராக உள்ளது. 1986 ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் நடந்த சும்தோரோங் சூ இராணுவ மோதலைத் தீர்க்க கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆனது. இதைக் கருத்தில் கொண்டு, கிழக்கு லடாக்கில், ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் எண்ணம் இல்லை. மேலும் பல சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகளுக்கு மோடி அரசு தயாராக உள்ளது. கூடவே இந்திய இராணுவம் எல்லை பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ALSO READ | LAC விவகாரம்: இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் 12வது பேச்சுவார்த்தை

லடாக்கில்  பகுதியின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் கூறுகையில், 'இரு படைகளுக்கும் இடையிலான அனைத்து சர்ச்சைக்குரிய விஷயங்களும் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் கருத்து. இதில் டெப்சாங் புல்ஜ் மற்றும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவை அடங்கும். அங்கு PLA (சீன இராணுவம்) தாக்குதல் தொடுக்கும் எண்ணத்தில் உள்ளது.

சீனாவுடனான (China) இருதரப்பு உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான முதல் அடி,  லடாக் எல்ஏசி ஒப்பந்தம்  மூலம் ஏற்பட வேண்டும் என்பதில் மோடி அரசு மிகத் தெளிவாக உள்ளது. 1980 ஆண்டுகளில் உணடான ராஜீய நடவடிக்கைகளுக்கு ஈடான எதையும் செய்வது குறித்து மோடி அரசு பரிசீலிக்கவில்லை. அதாவது முழுமையான தீர்வு ஏற்படும் முன்னர் பொருளாதார உறவை மீட்டெடுத்தல் போன்ற எதையும் செய்ய, மோடி அரசு தயாராக இல்லை ஏனென்றால், கிழக்கு லடாக்கில் உள்ள LAC முழுவதும் PLA முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, சீன விமானப்படை மேற்கு தியேட்டர் கமாண்ட் பிரிவில்,  அதன் விமான தளங்களை மேம்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளுடன் பலப்படுத்தி வருகிறது.

ALSO READ | Aadhaar: ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News