இந்தியா-பூட்டான் கோலோங்சு நீர் மின் திட்டம் ஒரு அலசல்...
ஜுன் 29ஆம் தேதியன்று இந்தியாவும் பூட்டானும் 600 மெகாவாட் கோலோங்சு நீர் மின் திட்டத்தில் (600 MW Kholongchhu Indo-Bhutan joint venture hydroelectric project) கையெழுத்திட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் இந்த ஒப்பந்தம் முக்கியமானது
ஜுன் 29ஆம் தேதியன்று இந்தியாவும் பூட்டானும் 600 மெகாவாட் கோலோங்சு நீர் மின் திட்டத்தில் (600 MW Kholongchhu Indo-Bhutan joint venture hydroelectric project) கையெழுத்திட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் இந்த ஒப்பந்தமானது மற்றொரு முக்கியமான மைல் கல் என்றால் அது மிகையாகாது. கிழக்கு பூட்டானில் உள்ள கோலோங்சு ஆற்றில் run-of-the-river project என்ற திட்டம் அமைந்துள்ளது.
பூட்டானின் Druk Green Power Corporation (DGPC) மற்றும் இந்தியாவின் Satluj Jal Vidyut Nigam Limited (SJVNL) of India ஆகியவற்றுக்கு இடையே உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனமான Kholongchhu Hydro Energy Limited (KHEL) இந்த திட்டத்தை செயல்படுத்தும். இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read Also | ராசிபலன்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும்
பூட்டான் தலைநகர் திம்புவில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் மற்றும் பூட்டான் வெளியுறவு அமைச்சர் டாக்டர். தாண்டி டோர்ஜி ஆகியோர் முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
38,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பூட்டான், வடக்கில் சீனாவையும், தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் இந்தியாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான தொடர்பு தொன்மை வாய்ந்தது. பூட்டானில் குடியேறியுள்ள இந்தியர்கள் பலர், அங்கு இந்தியா அமைத்துள்ள நீர் மின் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்து வருகிறாரகள்.
பூட்டான், 30,000 மெகாவாட் அளவிலான நீர் மின்சாரம் உற்பத்தி செய்யத்தக்க வளம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே அந்நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாகவும் உள்ள நீர் மின்சக்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதப் பங்களிக்கிறது.
Read Also | செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி திம்புவுக்கு பயணம் மேற்கொண்டபோது 720 மெகாவாட் மங்தேச்சு திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய உதவியுடன் மேலும் மூன்று பெரிய நீர் மின் திட்டங்கள் பூட்டானில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 336 மெகாவாட் சுகா, 60 மெகாவாட் குரிச்சு மற்றும் 1020 மெகாவாட் தலா திட்டம் ஆகும். இவை அனைத்துமே பூட்டானில் வெற்றிகரமாக இயங்குகின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் 75 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரம் பூட்டானின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், இந்தியாவுக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக, நீர் மின் உற்பத்தி உட்பட, பல்வேறு துறைகளில் திட்டங்களை வழங்கி அந்நாட்டிற்குள் நுழைய சீனா முயற்சிக்கும் நிலையில் இந்தியாவின் புதிய கோலோங்சு நீர் மின் திட்ட ஒப்பந்தம் முக்கியம் வாய்ந்த ஒன்றாகிறது.