India Budget 2024-25 Highlights: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினரும் பெரிய எதிர்பார்ப்புடன் இந்த இடைக்கால பட்ஜெட்டை எதிர்பார்த்திருக்கின்றனர். வரி குறைப்பு, தொழில்துறையினருக்கான சலுகைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சலுகை, பெண்களுக்கான திட்டங்கள் ஆகியவை இந்த பட்ஜெட்டில் பிரதான நோக்கமாக கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுயசார்பு பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இந்த இடைக்கால பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும், இந்த இடைக்கால பட்ஜெட் நிதியாண்டின் ஆரம்ப மாதங்களுக்கான நிதி திட்டத்தை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைக்கும் வரை அரசின் செயல்பாடுகளை தொடர உதவும். அதேநேரத்தில் மக்கள் மத்தியில் இருக்கும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அறிவிப்புகள் இருக்குமா? என்றால் அதற்கான வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் எந்த பெரிய அறிவிப்புகளும் இடம் பெறாது. குறிப்பாக இந்த 5 விஷயங்கள் சார்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்காது. 


மேலும் படிக்க | Budget 2024: இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்! இவ்வளவு விஷயங்கள் மாறப்போகிறதா?


இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறாத ஐந்து முக்கிய விஷயங்கள்:


1. பெரிய கொள்கை மாற்றங்கள்: தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த புதிய கொள்கை மாற்றங்களையும் அறிவிக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே நிர்மலா சீதாராமன் தெரிவித்தபடி, இந்த பட்ஜெட் நீண்ட கால பொருளாதார திட்டங்களை விட உடனடி செலவுகளை கையாள்வதில் கவனம் செலுத்தும்.


2. புதிய நலத்திட்டங்கள்: சமூக நலத்திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டாலும், இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவிலான புதிய நலத்திட்டங்கள் தொடங்கப்படும் வாய்ப்பில்லை. இதுபோன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும். அது தேர்தலுக்குப் பிறகு வரும் முழுமையான பட்ஜெட்டில் தான் சாத்தியமாகும்.


3. கடுமையான நிதி ஒருங்கிணைப்பு: நிதி பற்றாக்குறை குறைப்பு ஒரு இலக்காக இருந்தாலும், அதிகப்படியான நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்கலாம். பொருளாதார நிலைத்தன்மையை பராமரிப்பதே இடைக்கால பட்ஜெட்டின் நோக்கம் என்பதால், கடுமையான நிதி கட்டுப்பாடுகளை இதில் சாத்தியப்படுத்த முடியாது.


4. வருமான வரி சலுகைகள்: வரி அமைப்புகளில் பெரிய சீர்திருத்தங்கள் பொதுவாக முழுமையான பட்ஜெட்டிலேயே இடம் பெறுகின்றன. எனவே, பெரிய வரிச்சலுகைகளை எதிர்பார்க்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆண்டின் பிற்பகுதியில் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட்டிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.


5. புதிய நிதி ஒழுங்குமுறைகள்: இடைக்கால பட்ஜெட் என்பது நிதி ஒழுங்குமுறைகளில் மாற்றங்கள் அல்லது சிக்கலான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நேரமல்ல. இத்தகைய கொள்கை முடிவுகள் பொதுவாக முழுமையான பட்ஜெட்டுடன் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கு விவாதம் மற்றும் நீண்ட கால திட்டமிடலுக்கு அதிக இடம் உள்ளது.


இந்த ஐந்து விஷயங்களைத் தவிர, இடைக்கால பட்ஜெட்டில் பின்வரும் விஷயங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது. 


மக்கள் நல திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் மக்கள் நலன் சார்ந்த சில அறிவிப்புகளையும் வெளியிடலாம். இதில், உழைக்கும் வர்க்கத்தினருக்கு நிவாரணம், கிராமப்புற மேம்பாடு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவை இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.


பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்: இடைக்கால பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறலாம்.


மேலும் படிக்க | Budget 2024: இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் சாமானியர்களின் இந்த பிரச்சனைகள் தீரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ